Ration Card holders Gets Free Aavin Ghee on TN Pongal Prize 2021 - Special Announcement, Pongal Celebration | ரேஷன் அட்டைக்கு ஆவின் நெய் பொங்கல் பரிசு
Pongal Prize for Ration Card Holders | Special Announcement
ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி:
ஒவ்வொரு வருடமும் தமிழகத்தில் பொங்கல் பரிசுப்பொருட்கள் வழங்கப்படுகின்றன. பொங்கல் செய்வதற்கு தேவையான அனைத்து பொருட்கள் மற்றும் 1000 ரூபாய் பணம் வழங்கப்படுகிறது.
2021 ஆம் ஆண்டிற்கான பொங்கல் பண்டிகை வரவிருக்கும் நிலையில் தமிழக அரசு பொங்கல் பொருட்களுடன் சேர்த்து ஆவின் நெய் வழங்கவுள்ளது.
ரேஷன் அட்டை வைத்திருக்கும் அனைவருக்கும் 100ml நெய் இலவசமாக வழங்கப்படும் என மதுரை ஆவின் நிர்வாகம் செய்தி வெளியிட்டுள்ளது.
2021 ஆம் ஆண்டிற்கான பொங்கல் பை வழங்கும் திட்டத்துடன் இந்த நெய் பாட்டில்களும் வழங்கப்படவுள்ளது. மதுரை ஆவின் நிர்வாகம் சார்பாக 2 லட்சத்து இருபதாயிரம் பாட்டில்கள் தயாரிக்கப்பட்டுவருகிறது.
தற்போது வநதுள்ள தகவலின் அடிப்படையில் 9 மாவட்டங்களுக்கு வழங்கப்படும்.
மதுரை, தேனி, தஞ்சாவூர், திருவாரூர், திருநெல்வேலி, நாகப்பட்டினம், கடலூர், தென்காசி , தூத்துக்குடி இந்த மாவட்டங்களில் சேர்த்து மொத்தம் உள்ள அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் இந்த நெய் கிடைக்கும்.
இதற்கான தயாரிப்பு பணிகள் தற்பொழுது முழுவீச்சில் நடைபெற்றுக்கொண்டுள்ளது.
மேலும் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் இந்த நெய் பாட்டில்கள் அந்த அந்த பகுதியில் உள்ள ஆவின் நிர்வாகம் மூலமாக வழங்கப்படும் என அரசு தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
பொங்கல் பரிசாக இதுவரை வழங்கப்பட்ட பரிசு பொருட்கள்:
- பச்சரிசி 1 கிலோ
- சர்க்கரை 1 கிலோ
- முந்திரி, திராட்சை, ஏலக்காய்
- கரும்பு,
மற்றும் பரிசுத்தொகை 1000 ரூபாய்
மேலும் புயல் பாதித்துள்ள பகுதிகளுக்கு இந்த ஆவின் நிர்வாகம் சார்பாக 500 கிராம் மதிப்புள்ள பால் பவுடர்கள் தயாரிக்கப்பட்டு வழங்கப்பட்டன.
இதன் அடிப்படையில் இதுவரை 19 டன் மெட்ரிக் பால் பவுடர்கள் தயாரிக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ளதையும் ஆவின் சார்பாக செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரேஷன் அட்டை உங்களிடம் இல்லையா? உடனே இதை பண்ணுங்க -> Click Here
தொலைந்துபோன ரேஷன் அட்டையை பெற வேண்டுமா? --> Click Here
சர்க்கரை அட்டையை அரிசி அட்டையாக மாற்ற வேண்டுமா? ->> Click Here
மேலும் பல பயனுள்ள தகவல்கள் உங்களுக்கு Notification ஆக கிடைக்க வேண்டுமா? Click Here
No comments: