TNPSC Annual Planner 2021 - Download, Exam Dates, Results and Notifications | 2021 TNPSC தேர்வு அட்டவணை

TNPSC Annual Planner 2021 - TNPSC 2021 ஆம் ஆண்டிற்கான தேர்வு அட்டவணை 


அரசு தேர்வுகளுக்கு முயற்சி செய்பவரா நீங்கள் ? இது உங்களுக்கான செய்தி !!!




2021 ஆம் ஆண்டிற்கான தேர்வு அட்டவணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. குரூப் 1, குரூப் 2, குரூப் 3, குரூப் 4 மூலமாக தமிழ்நாட்டில் அரசு பணிகளுக்கு தேர்வு நடத்தப்பட்டு காலிபணியடங்கள் நிரப்பப்படும்.


கொரோனா காரணமாக அனைத்து தேர்வுகளும் இந்த வருடம் நடத்தப்படவில்லை. தேர்வு தள்ளிவைக்கப்பட்டது.


இந்த நிலையில் தற்பொழுது அரசு துறைகளின் சார்பாக 2021 ஆம் ஆண்டிற்கான அனைத்து தேர்வுகளும்  நடக்கும் என்ற புதிய அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. 


தேர்விற்கு தயாராகும் அனைத்து மக்களும் இந்த அட்டவணையின்படி வேலைகளுக்கு விண்ணப்பிக்கலாம்.


தேர்வு நடத்தப்படும் நாள், தேர்வு முடிவுகள் மற்றும் சான்றிதழ் சரிபார்த்தல் என அனைத்தும் இந்த அட்டவணையில் தெரிந்துகொள்ளலாம்.



குரூப் 1 தேர்வு அட்டவணை: 



கொரோனா பெருந்தொற்றின் காரணமாக தள்ளிவைக்கப்பட்டிருந்த Group 1 தேர்வுகள் ஜனவரி மாதம் 3ஆம் தேதி நடைபெறும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.



தொழில் மற்றும் வர்த்தக உதவி இயக்குனர் பணிகளுக்கான தேர்வு ஜனவரி 9 மற்றும் 10ஆம் தேதி நடைபெறும்.


சிறு குறு மற்றம் நடுத்தர தொழில் துறையில் உதவி கண்காணிப்பாளர் பணிகளுக்கும் ஜனவரி 9 மற்றும் 10ஆம் தேதி தேர்வு நடைபெறும்.


குரூப் 2 மற்றும் 2A பணிகளுக்கு மே மாதம் மற்றும் VAO, குரூப் 4 பணியிடங்கள் செப்டம்பர் மாதமும் அறிவிப்பு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


முக்கியமான அறிவிப்பு:


TNPSC தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கும் முறையில் புதிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. OTR Registration செய்வதில் ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.


இதுவரை உங்கள் ஆதார் எண்ணை இணைக்காமல் இருந்தால் தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியாது. 


How to Link Adhaar in TNPSC:


உங்களின் பதிவு எண் மூலமாக Login செய்ததும் ஆதார் எண்ணை இணைக்கும்படி Notification இருக்கும்.


12 இலக்க ஆதார் எண்ணை சரியாக உள்ளீடு செய்து Send OTP -ஐ கிளிக் செய்ய வேண்டும்.


அதாருடன் இணைக்கப்பட்ட தொலைபேசி எண்ணிற்கு கடவுச்சொல் வரும் அதனை சரியாக சமர்ப்பித்து Link செய்யவேண்டும்.



Download TNPSC Annual Planner 2021 


தேர்வர்கள் இந்த அட்டவணையை TNPSC அதிகாரபூர்வ இணையதளத்தில் Download செய்துகொள்ளலாம்.


Download TNPSC Annual Planner 2021 -> Click Here 

TNPSC Annual Planner 2021 - Download, Exam Dates, Results and Notifications | 2021 TNPSC தேர்வு அட்டவணை TNPSC Annual Planner 2021 - Download, Exam Dates, Results and Notifications | 2021 TNPSC தேர்வு அட்டவணை Reviewed by eGovernance Helpdesk on December 17, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.