Temporary Cracker License for Christmas and New Year Celebration - Apply Procedure, Eligibility, Required Documents |
Temporary Cracker License for Christmas and New Year 2021 | Special Announcment
தற்காலிக பட்டாசு கடை வைப்பதற்கு சூப்பரான வாய்ப்பு !!!
தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் பட்டாசு விற்பதற்காக உரிமம் தற்காலிகமாக வழங்கப்படுகிறது. தீபாவளி பண்டிகைக்கு ஓர் மாதம் முன்பு இருந்து வழங்கப்படும்.
இந்த வருடம் கிறிஸ்துமஸ் மற்றும் New Year பண்டிகைகளை கொண்டாடும் விதத்தில் பட்டாசுகளை விற்பனை செய்ய புதிய உரிமம் வழங்கப்படுகிறது.
தமிழக அரசின் இ சேவை மையங்களுக்கு சென்று இந்த உரிமம் பெறுவதற்கு Online -ல் விண்ணப்பிக்கலாம்.
How to Apply Temporary Cracker License
Watch this Video for Applying Procedure
2019 முதல் தமிழ்நாடு அரசு இந்த உரிமத்திற்கு online -ல் விண்ணப்பிக்கும் முறையை அறிமுகப்படுத்தியுள்ளது .
தமிழ்நாட்டில் பட்டாசு கடை வைப்பதற்கு இந்த License கட்டாயமாக தேவைப்படும்.
கடை எப்படி இருக்க வேண்டும்?
பட்டாசு கடை மக்கள் அனைவரும் சரியாக பயன்படுத்தும் வகையிலும் போக்குவரத்துக்கு இடையூறு தராத இடத்திலும் இருக்க வேண்டும் .
பட்டாசு கடை வைக்க விரும்புபவர்கள் எந்த இடத்தில் வைத்தாலும் அந்த இடத்தின் Document கண்டிப்பாக தேவைப்படும் .
சொந்த இடத்தில் வைத்தால் Document போதுமானது. வேறு ஒருவர் இடத்தில் வைத்தால் அந்த இடம் வைத்திருப்பவரிடம் இருந்து No Objection Certificate பெற வேண்டும் .
கடையில் பாதுகாப்பு அம்சங்கள் எல்லாம் சரியாக இருக்க வேண்டும். தீயணைப்பான் கருவிகள் , மணல் Buckets, மற்றும் பாதுகாப்பு முதலுதவி Kits இருக்க வேண்டும் .
கடையில் தனித்தனியாக Entry and Exit இருக்க வேண்டும்.
Approving Authority for this License
நீங்கள் எந்த இடத்தில் கடை வைக்க போகிறீர்களாளோ அந்த இடம் எந்த காவல் நிலையத்திற்கு உட்பட்டதோ அந்த காவல் நிலையத்தின் ஒப்புதல் பெற வேண்டும் .
உங்கள் கிராமம் எந்த Division -ல் வருகிறதோ அந்த Revenue Division Office -ல் ஒப்புதல் பெற வேண்டும்.
மாவட்ட Fire and Safety அலுவலகத்தில் ஒப்புதல் பெற வேண்டும்.
விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள்
Applicant Photo
Adhaar Card
Chitta / Land Documents
NOC Document if Lease
கடையின் Blue Print (Sketch)
கடையின் ஒட்டுமொத்த பரப்பளவு விபரம்
பாதுகாப்பு உபகரணங்கள் Check List
விண்ணப்பிப்பது எப்படி ?
நீங்கள் இந்த License Online -ல் விண்ணப்பிக்க வேண்டும். உங்களுக்கு அருகாமையில் உள்ள அரசு eSevai மையங்களை அணுகலாம்
நீங்கள் விண்ணப்பித்த விண்ணப்பம் approval ஆகிவிட்டதா என்று Online -மூலமாக தெரிந்துகொள்ளலாம்.
இந்த தற்காலிக பட்டாசு உரிமம் Online -ல் Download செய்துகொள்ளலாம்.
Trending Now | Adhaar | Smart Card | PAN | Useful Videos | Welfare Schemes |
No comments: