Link Adhaar with TNPSC One Time Registration - Step by Step Registration Procedure
TNPSC முக்கிய அறிவிப்பு - அரசு தேர்வு எழுதுவோருக்கு ஆதார் கட்டாயம்
Link Adhaar with TNPSC One Time Registration
தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வாணையம் தற்பொழுது அனைத்து தேர்வர்களுக்கும் முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
TNPSC தேர்வு Hall Ticket -ஐ பதிவிறக்கம் செய்ய ஆதார் என் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
2020 ஆம் ஆண்டு நடக்கவிருந்த அனைத்து தேர்வுகளும் கொரோனா காரணமாக ரத்து செய்யப்பட்டன. அனைத்து தேர்வுகளும் 2021 ஆம் ஆண்டில் எப்போது நடக்கும் எனும் பட்டியலை TNPSC வெளியிட்டிருந்தது.
ஏற்கனவே விண்ணப்பித்த தேர்வுக்கான Hall Ticket பதிவிறக்கம் செய்வதற்கு ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
ஏன்? எதற்காக இந்த புதிய நடைமுறை?
அரசு தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் தங்களது அடையாள சான்றிதழை சரியாக காண்பிக்காததால் சிலருக்கு வேலை கிடைக்காமல் போனது.
இந்த ஆதார் இணைப்பை செய்துவிட்டால் தனியாக முகவரி மற்றும் அடையாள சான்றிதழ்கள் தேவைப்படாது.
ஆதாரை இணைப்பது எப்படி?
TNPSC அதிகாரபூர்வ இணையதளமான tnpsc.gov.in மூலம் ஆதார் எண்ணை இணைக்கலாம்.
TNPSC மூலமாக நடத்தப்படும் அனைத்து தேர்வுகளும் ஒரு முறை ரெஜிஸ்டர் செய்வது கட்டாயமாகும்.
One Time Registration ஏற்கனவே வைத்திருப்பவர்கள் தற்பொழுது Login செய்தால் ஆதார் இணைப்பு பக்கம் மட்டுமே Open ஆகும்.
Link Your Adhaar with TNPSC Watch this Video
உங்கள் ஆதாரின் 12 இலக்க எண்ணை சரியாக Type செய்யவேண்டும்.
பெயர் ஆதாரில் உள்ளவாறு சரியாக Type செய்யவேண்டும்.
OTR -ல் உங்கள் பெயர் எப்படி உள்ளது என்பது Display ஆகும்.
அனைத்து விபரங்களையும் சரியாக கொடுத்தவுடன் Send OTP எனும் Option -ஐ Click செய்யவும்.
உங்கள் தொலைபேசி எண்ணிற்கு OTP வரும். அதனை சரியாக சமர்ப்பிக்க வேண்டும்.
உங்கள் ஆதார் இணைக்கப்பட்டதா இல்லையா என்பதற்கான Notification கிடைக்கும்.
No comments: