சூப்பரான Govt Job ! சொந்த ஊரிலேயே நிரந்தர அரசு வேலை ! கிராம ஊராட்சி செயலர் | No Exam | Dont Miss It
அனைவருக்கும் வணக்கம் !!!
இந்த பதிவின் மூலமாக தமிழ்நாடு முழுவதும் புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள வேலைவாய்ப்புகளை பற்றி தெரிந்துகொள்ளலாம்.
தமிழ்நாடு அரசு கிராம ஊராட்சி செயலர்
அனைத்து கிராமங்களிலும் பஞ்சாயத்து அலுவலகம் மூலமாக அனைத்து அரசு சம்பந்தப்பட்ட சலுகைகளும் கிடைக்கும். அங்கு காலியாக உள்ள பணியிடங்கள் அனைத்தும் மாவட்டம் வாரியாக தற்போது நிரப்பப்பட்டு வருகிறது.
கிராம ஊராட்சி செயலர் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. விருப்பமும் தகுதியும் உள்ள அனைவரும் விண்ணப்பிக்கலாம்.
இந்த பணிகளுக்கான விண்ணப்ப படிவம் பூர்த்தி செய்யப்பட்டு சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
கிராம ஊராட்சி செயலர் வேலை என்ன?
- கிராமப்புறங்களில் அரசு அறிவிக்கும் திட்டங்கள் மற்றும் சலுகைகளை அனைத்து மக்களுக்கும் பெற செய்வது.
- 100 நாள் வேலை பணியாளர்களை வேலைக்கு எடுப்பது மற்றும் சரியான பணிகளை வழங்குவது.
- கிராம பஞ்சாயத்து சம்பந்தப்பட்ட அனைத்து விபரங்களையும் சரியாக வைத்திருக்க வேண்டும்.
எவ்வளவு காலிப்பணியிடங்கள் உள்ளன ?
தமிழ்நாடு முழுவதும் தற்போது 800கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் நிரப்பப்டுள்ளன. மேலும் மாவட்டம் வாரியாக அறிவிப்புகள் வெளியாகும்.
தமிழ்நாட்டில் தற்போது அனைத்து துறைகளிலும் உள்ள வேலைவாய்ப்புகள் இந்த ஆண்டு இறுதிக்குள் நிரப்பதிட்டமிடப்பட்டுள்ளது.
கல்வித்தகுதி:
குறைந்தபட்சம் 10ஆம் வகுப்பு தேர்ச்சி அடைந்திருந்தால் போதும்.
வயது வரம்பு:
குறைந்தபட்சம் 18 வயது முதல் 30 வயது வரை இருக்கலாம்
SC /ST /MBC போன்ற வகுப்புகளை சார்ந்தவர்களுக்கு 5 வயதுவரை சலுகை வழங்கப்படுகிறது.
காலியிடங்கள் எங்கு உள்ளன ?
ஒவ்வொரு மாவட்டம் வாரியாக தற்பொழுது பணியிடங்கள் அரசு அறிவிப்பின் மூலமாக கொடுக்கப்பட்டுள்ளன. மாவட்டத்தின் அதிகாரபூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
ஒவ்வொரு மாவட்டங்களில் பத்திரிகை செய்திகளாக வெளியிடப்பட்டுள்ளன.
சம்பளம் எவ்வளவு ?
7500 + இதர படிகள் அரசாணைப்படி.
தேர்வு எப்படி இருக்கும் ?
கிராம ஊராட்சி செயலர் பணியிடங்களுக்கு நேர்முகத்தேர்வு மட்டுமே இருக்கும். வட்டார வளர்ச்சி அலுவலகங்கள் மூலமாக தேர்வின் தேதி மற்றும் நேரம் தபால் மூலமாக தெரியப்படுத்துவார்கள்.
கட்டணம் எவ்வளவு ?
இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க எந்த ஒரு கட்டணமும் இல்லை இலவசமாக விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்க கடைசிநாள் ?
ஒவ்வொரு கிராம ஊராட்சிக்கும் கடைசித்தேதி மாறுபடும். வேலைவாய்ப்பிற்கான அறிவிப்பில் அனைத்து விபரங்களும் இருக்கும்.
இந்த வேலை பெறுவதற்கான நிபந்தனைகள்:
விண்ணப்பதாரர்கள் தேவையான அனைத்து ஆவணங்களையும் சரியாக சமர்ப்பிக்கவேண்டும்.
கல்வித்தகுதி, இருப்பிட சான்றிதழ், வகுப்பு சான்றிதழ் சரியாக இணைந்திருக்க வேண்டும்.
வயது வரம்பு, கல்வித்தகுதி மற்றும் இன சுழற்சி போன்ற அனைத்தும் பொருந்தாமல் இருக்கும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
விண்ணப்பிக்கும் ஊராட்சி பகுதியில் மட்டுமே விண்ணப்பதாரர் வசிப்பிடம் இருக்கவேண்டும்.
தகுதியான விண்ணப்பதாரர்கள் அந்த பகுதிகளில் இல்லையென்றால் இந்த ஊராட்சி எல்லையில் இருக்கும் விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்படும்.
சூப்பரான Govt Job ! சொந்த ஊரிலேயே நிரந்தர அரசு வேலை ! கிராம ஊராட்சி செயலர் | No Exam | Dont Miss It
Reviewed by eGovernance Helpdesk
on
October 06, 2020
Rating:
No comments: