சற்று முன்: தமிழக அரசின் அசத்தலான உதவித்தொகை திட்டம் அறிவிப்பு | மக்கள் மகிழ்ச்சி |முழு விபரம் உள்ளே

அனைவருக்கும் வணக்கம் !!!

இந்த பதிவில் தமிழ்நாடு அரசு மூலமாக வழங்கப்பட்டுவரும் சிறப்பு உதவித்தொகை பற்றி தெரிந்துகொள்ளலாம். தமிழ்நாடு அரசு சார்பாக படித்துவிட்டு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தவர்களுக்கு வேலை கிடைக்காமல் இருந்தால் உதவித்தொகை வழங்கப்படுகிறது.




உதவித்தொகை பெறுவதற்கான அரசாணை:


தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின் மூலமாக இந்த உதவித்தொகை பெற அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. 
வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தவர்களுக்கு மட்டும் இந்த உதவித்தொகை வழங்கப்படுகிறது. 

வேலைவாய்ப்பு அலுவலகத்தில் ஏன் பதிவு செய்யவேண்டும் ?


நீங்கள் 10, 12, ஆம் வகுப்பு படிக்கும்பொழுதே வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவுசெய்து வைத்துக்கொள்வது மிகவும் நல்லது. அரசு வேலைகள் உங்களுக்கு கிடைக்கவேண்டுமெனில் இந்த பதிவு மிகவும் முக்கியம். மேலும் 10ஆம் வகுப்பு முடித்தவுடன் பதிவு செய்தால் வேலை பெறுவதற்கான முன்னுரிமை அதிகமாக கிடைக்கும்.

தற்பொழுது இந்த வேலைவாய்ப்பிற்கான பதிவினை நீங்களே Online மூலமாக செய்துகொள்ளலாம். இதற்காக எந்த கட்டணமும் இல்லை.

உதவித்தொகை யாருக்கு கிடைக்கும்?

நீங்கள் இந்த அலுவலகத்தில் பதிவு செய்து 5 வருடங்களாக வேலை கிடைக்கவில்லையாயென்றால் இந்த உதவித்தொகை பெற முடியும்.

நீங்கள் படித்த படிப்பிற்கு ஏற்ப இந்த உதவித்தொகை வழங்கப்படும். 

10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர்கள்: மாதம் 200 ரூபாய் 
10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள்:   மாதம் 300 ரூபாய்
+2 தேர்ச்சி / சமமான படிப்புகள் :               மாதம் 400 ரூபாய் 
பட்ட படிப்பு / முதுகலை படிப்பு:                மாதம் 600 ரூபாய் 

உதவிதொகை பெறுவதற்கு தேவையான தகுதிகள் என்ன ?

கல்வித்தகுதி :


குறைந்தபட்சம் 10 ஆம் வகுப்பு படித்திருக்க வேண்டும் 

12 ஆம் வகுப்பு அல்லது சமமான படிப்பு 

பட்டப்படிப்பு / முதுகலை பட்டப்படிப்புகள் 

உதவித்தொகை பெறுவதற்கு காத்திருப்பு காலம்:

பதிவு செய்ததில் இருந்து குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் முடிந்திருக்க வேண்டும்.

குடும்ப ஆண்டு வருமானம்:

விண்ணப்பதாரரின் மொத்த ஆண்டு வருமானம் 50,000 ரூபாய் விட குறைவாக இருக்கவேண்டும்.

வயது வரம்பு என்ன?


விண்ணப்பதாரர் இந்த உதவித்தொகை பெறுவதற்கு 40 வயது மிகாமல் இருக்கவேண்டும். பழங்குடியினர் வகுப்பிற்கு 45 வயது வரை சலுகை உள்ளது.

இருப்பிட சான்றிதழ்:


விண்ணப்பதாரர் குறைந்தபட்சமாக 15 வருடங்கள் அந்த இடத்தில வசித்திருக்க வேண்டும்.

முக்கியமான தகுதி:


விண்ணப்பதாரர் எந்த ஒரு அரசு / தனியார் வேலைகளில் இருக்கக்கூடாது. மேலும் அரசு / தனியார் மூலமாக வழங்கப்படும் எந்தஒரு உதவித்தொகையும் பெறுதல் கூடாது.

விண்ணப்பிப்பது எப்படி?


இந்த உதவித்தொகை பெறுவதற்கு தேவையான விண்ணப்ப படிவத்தை சரியாக பூர்த்தி செய்து தேவைப்படும் ஆவணங்களுடன் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களில் சமர்ப்பிக்கவேண்டும்.

வங்கிக்கணக்கு எண் மற்றும் கல்வித்தகுதி சான்றிதழ் , வேலைவாய்ப்பு பதிவு எண் ஆகியவற்றை சரியாக பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும்.

வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற்றுக்கொண்டிருந்தால் அந்த பதிவினை சரியாக புதுப்பிக்கவேண்டும்.

உண்மைக்கு மாறான விபரங்கள் அளித்து வந்தால் வேலைவாய்ப்பு பதிவு எண் ரத்து செய்யப்படும்.

இந்த உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்ப படிவத்தினை இங்கு பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.



இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும்.

நன்றி!!!
சற்று முன்: தமிழக அரசின் அசத்தலான உதவித்தொகை திட்டம் அறிவிப்பு | மக்கள் மகிழ்ச்சி |முழு விபரம் உள்ளே சற்று முன்: தமிழக அரசின் அசத்தலான உதவித்தொகை திட்டம் அறிவிப்பு | மக்கள் மகிழ்ச்சி |முழு விபரம் உள்ளே Reviewed by eGovernance Helpdesk on October 05, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.