தமிழக அரசின் தனியார் வேலைவாய்ப்பு விண்ணப்பிப்பது எப்படி ? LATEST TAMILNADU GOVT JOBS APPLY NOW
தமிழக அரசின் தனியார் வேலைவாய்ப்பு இணையதளம்
தமிழ்நாடு அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சிதுறை மூலமாக இயங்கிவருகிறது. "தனியார்துறை வேலைவாய்ப்பு இணையம்" என்ற பெயரில் துவங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து வேலைகளையும் மிகவும் எளிதாக தெரிந்துகொள்ளமுடியும்.
சிறப்பம்சங்கள்:
இந்த இணையத்தின் மூலம் இதுவரை 5000 மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் பதிவு செய்துள்ளனர்.
40-ற்கும் மேற்பட்ட துறைகளில் வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
40000-ற்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
தினமும் புதிய புதிய வேலைவாய்ப்புகள் Update செய்யப்படுகிறது.
வேலை தேடுவது எப்படி ?
இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து வேலைகளுக்கும் நீங்கள் விண்ணப்பிக்க முதலில் Register செய்யவேண்டும்.
முகப்பு பக்கத்தில் உள்ள "Candidate Login" எனும் Link -ஐ Click பண்ணுங்க.
உங்களின் Email ID /Mobile Number மூலமாக Login செய்துகொள்ளலாம்.
- புதிதாக Account Create செய்வதற்கு "Click Here to Register" எனும் link ஐ Click பண்ணுங்க.
- உங்களின் பெயர், தந்தையின் பெயர், Email ID, Mobile Number அனைத்தையும் சரியாக Fill செய்யவேண்டும்.
- Register Option Click பண்ணவும்.
- புதிதாக Register செய்தபின் உங்களின் Profile -ஐ Update செய்துகொள்ளவேண்டும்.
புதிய வேலைக்கு விண்ணப்பிப்பது எப்படி ?
முகப்பு பக்கத்தில் உள்ள "Search Job" எனும் Option மூலமாக உங்களுக்கு பிடித்த வேலைகளை தேடிக்கொள்ளலாம்.
மூன்று விதமாக வேலை தேடலாம்.
- SALARY
- LOCATION
- JOB SECTOR
மாவட்ட வாரியாக உள்ள அனைத்து வேலைகளையும் தேடிக்கொள்ளலாம். மேலும் எந்த துறையில் வேலைவேண்டுமோ அதை மட்டும் Filter செய்துகொள்ளவும் முடியும்.
எந்த வேலை விபரங்கள் தேவைப்படுகிறதோ Click செய்யவும்.
- வேலைக்கு என்ன தகுதி ?
- எவ்வளவு சம்பளம் ?
- எங்கு வேலை
- வேலைக்கு முன் அனுபவம் தேவையா இல்லையா?
இதுபோன்ற அனைத்து விபரங்களையும் தெரிந்துகொள்ளலாம்.
உங்களுக்கு இந்த வேலை பிடித்திருந்தால் Apply Now எனும் Option மூலமாக விண்ணப்பிக்கலாம்.
சம்பந்தப்பட்ட அலுவலகத்தின் மூலம் எப்போது Interview Process இருக்கும் என்று தெரியப்படுத்துவார்கள்.
இந்த வேலைவாய்ப்பு இணையதளத்தில் நீங்கள் இலவசமாக விண்ணப்பித்துக்கொள்ளலாம். மேலும் நீங்கள் ஒரு தனியார் Company வைத்திருந்தால் இலவசமாக காலிப்பணியிடங்களை Update செய்துகொள்ளலாம்.
No comments: