How to Apply First Graduate Certificate Online? | முதல் பட்டதாரி சான்றிதழ் | TamilNadu Online Services | TNeGA
முதல் பட்டதாரி சான்றிதழ் பெறுவது எப்படி ?
அனைவருக்கும் வணக்கம் !!!
தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து மாணவர்களும் முதல் பட்டதாரி சான்றிதழ் வாங்கலாம். இந்த சான்றிதழ் பெறுவதற்கு online மூலமாக விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
தமிழ்நாடு அரசு வருவாய்த்துறை சான்றிதழ்கள் பெறுவதற்கு tnesevai.tn.gov.in என்ற இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம். இந்த சான்றிதழ் எப்படி பெறுவது என்பது பற்றி தெளிவாக பார்க்கலாம் !!!
முதல் பட்டதாரி என்றால் என்ன ?
ஒரு குடும்பத்தில் உள்ள உறுப்பினர்களில் முதல் முறையாக ஒருவர் பட்ட படிப்பு (degree) படிக்க விரும்பினால் இந்த சான்றிதழ் பெற்றுக்கொள்ளலாம்.
இந்த சலுகை குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே தமிழக அரசால் வழங்கப்படுகிறது.
முதல் பட்டதாரி சான்றிதழ் எதற்காக தேவைப்படும் ?
மாணவர்கள் தொழில்நுட்ப கல்லூரிகளில் சேரும்பொழுது இந்த சான்றிதழ் கொடுத்தால் அவர்களது கட்டணத்தொகையில் இருந்து 20000 ரூபாய் சலுகை கிடைக்கும்.
இந்த சலுகையை கல்லூரி முடியும் வரை ஒவ்வொரு வருடமும் பெறலாம்.
முதல் பட்டதாரி சான்றிதழ் பெறுவது எப்படி ?
இந்த சான்றிதழ் பெறுவதற்கு இரண்டு வழிமுறைகள் உள்ளன.
- அரசு இசேவை மையங்கள்
- Citizen Login
பொதுமக்கள் அனைவரும் பயன்பெறும் வகையில் அரசு esevai மையங்கள் அனைத்து மாவட்டத்திலும் துவங்கப்பட்டது.
அரசு வருவாய்த்துறை சான்றிதழ்கள், பட்டா மாறுதல், திருமண உதவித்தொகை போன்ற அனைத்து சேவைகளுக்கும் இங்கு விண்ணப்பிக்கலாம்.
முதல் பட்டதாரி சான்றிதழ் விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள் என்ன?
- விண்ணப்பதாரரின் புகைப்படம்
- ஆதார் கார்டு
- பள்ளி மாற்றுச்சான்றிதழ் (TC)
- குடும்ப ரேஷன் கார்டு / ஸ்மார்ட் கார்டு
- வருமான சான்றிதழ்
- சுயஉறுதிமொழி படிவம்
மேலும் உங்கள் குடும்பத்தில் உள்ள அனைத்து உறுப்பினர்களின் கல்வித்தகுதி தேவை. இந்த ஆவணங்கள் மட்டும் இருந்தால் முதல் பட்டதாரி சான்றிதழ் விண்ணப்பிக்கலாம்.
Online -ல் விண்ணப்பித்தவுடன் ஒப்புகைசீட்டு வழங்கப்படும். உங்கள் விண்ணப்பம் தற்போது எந்த நிலையில் உள்ளது என்று நீங்களே Online மூலமாக தெரிந்துகொள்ளலாம்.
இந்த சான்றிதழ் விண்ணப்பிக்க சேவை கட்டணம் 60 ரூபாய் மட்டுமே.
No comments: