சற்றுமுன் வெளியான தகவல் !!! மக்கள் மகிழ்ச்சி !!!

 🔥 தமிழகத்தில் இன்று 1,289 பேருக்கு கொரோனா.. அபாயகட்டத்தில் 4 மாவட்டங்கள்.!


தமிழகத்தில் மீண்டும் கொரோனா பரவல் வேகமெடுக்க தொடங்கியுள்ளது.

இன்று மொத்தமாக 1,289 பேருக்கு பாதிப்பு உறுதியாகி, மொத்த தமிழக கொரோனா பாதிப்பு 8,66,982 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸின் பரவல் தொடர்ந்து அதிகரிக்க தொடங்கியுள்ளது.

தினமும் அதிகரித்து கொண்டு வந்த கொரோனா பரவலின் காரணமாக மக்கள் பீதியில் உறைந்துள்ளனர்.

அரசும் சோதனைகளை அதிகப்படுத்தி கொண்டே வந்தது. பல தடுப்பு நடவடிக்கைகளும் அறிவிக்கப்பட்டது.

இதனை மக்கள் முறையாக கடைபிடித்து அரசுக்கு ஒத்துழைப்பு கொடுத்ததால் கொரோனா பரவல் தொடர்ந்து குறைந்தது.

ஆனால், தற்போது மீண்டும் கொரோனா வைரஸ் பரவல் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் அதிகரித்து ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், இன்று கொரோனாவால் 1,289 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 8,66,982 ஆக உயர்ந்துள்ளது.

இன்று 634 பேர் பூரண நலன் பெற்றதையடுத்து, இதுவரையிலும் பூரண நலன் பெற்றவர்களின் எண்ணிக்கை 8,45,812 ஆக உயர்ந்துள்ளது.

இன்று மட்டும் 9 பேர் பலியானதையடுத்து, மொத்த பலி எண்ணிக்கை 12,599 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று மேலும் 466 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் சென்னையின் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2,41,623 ஆக உயர்ந்துள்ளது.


அதிகபட்சமாக சென்னையை அடுத்து கோயம்புத்தூர் மாவட்டத்தில் 109 பேருக்கும் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தில் 138 பேருக்கும் கொரோனா பாதிப்புஉறுதியாகியுள்ளது. தஞ்சாவூர் மற்றும் திருவாரூர் மாவட்டத்தில் கொரோனா அதிகரித்துள்ளது.


குறைந்து வந்த கொரோனா மீண்டும் வேகமெடுக்க தொடங்கியுள்ளதால், மக்கள் கொரோனா வழிகாட்டுதல் நெறிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்று தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது

. 🔥 தமிழகத்தில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை – பெற்றோர்கள் கோரிக்கை!! தமிழகத்தில் கொரோனா தொற்று அச்சம் காரணமாக 9 முதல் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 22ம் தேதி முதல் விடுமுறை அளிக்கப்பட்டு உள்ள நிலையில், 12ம் வகுப்பிற்கு விடுமுறை வழங்கி ஆன்லைன் வகுப்புகளை தொடர வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது.


🔥 தமிழக அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம்!! அதன்படி அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதிய திட்டத்தை விரைவில் நடைமுறைபடுத்த திட்டம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.


மேலும் 1.4.2003 அன்று அல்லது அதன் பின்னர் முறையான அரசு பணியாளர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டதை நடைமுறைப்படுத்த உள்ள சாத்திய கூறுகளை பரிசீலனை செய்து அரசிடம் அனுமதி வழங்க அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது என கூறினார். ஆனால் அரசு ஊழியர்கள் இதனை விரைவில் செயல்படுத்தப்பட வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டதால் இது குறித்த அறிக்கையை தற்போது வெளியிட்டுள்ளார்.


அதில், “1.04.2003 அன்றோ அல்லது பின்னரோ பணியில் சேர்ந்த ஊழியர்களுக்கு பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவதற்கான சாத்திய கூறுகளை ஆய்வு செய்து அரசிற்கு பரிந்துரைகளை அனுப்ப வல்லுநர் குழு அமைக்கப்பட்டது. அதனை பரிசீலனை செய்து உரிய முடிவினை மேற்கொண்டு நடவடிக்கை எடுத்து விரைவில் அரசாணை வெளியிடப்படும். எனவே தற்போது தங்களது கோரிக்கைகளை ஏற்கத்தக்கதல்ல என்று அவர் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவித்துள்ளார். 🔥 ஆரம்ப பள்ளி முதல் ஆராய்ச்சி கல்வி வரை இலவசம்: சீமான் நான் அறிவு செல்வமான கல்வியை இலவசமாக தருகிறேன். ஆரம்ப பள்ளி முதல் ஆராய்ச்சி கல்வி வரை இலவசம்.



மதுரை கலைப்பண்பாட்டுக்கான தலைநகர், தொழில்வளர்ச்சிக்கான தலைநகராக கோவை - திருப்பூர் அமைக்கப்படும். பிரேசிலில் கரும்பில் இருந்து பெட்ரோல் தயாரிக்கப்படுவது போல், இங்கும் தயாரிக்கப்படும்.

திமுக, அதிமுக வேட்பாளர்கள் அவர்களின் கட்சி வேட்பாளர்கள். நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் மக்களின் வேட்பாளர்.


ஒரே ஒருமுறை விவசாயி சின்னத்திற்கு வாக்களியுங்கள். இவ்வாறு அவர் பேசினார்.
🔥 அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் வழங்கப்படும்.. முதல்வர் அதிரடி அறிவிப்பு !! அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் 6 சிலிண்டர் வழங்கப்படும் என முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நிறைவடைந்து நாளை இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படவுள்ளது.


முன்னதாக அதிமுக, திமுக, மக்கள் நீதிமய்யம், அமமுக என அனைத்து கட்சிகளும் தேர்தல் அறிக்கை வெளியிட்டன. அந்த வகையில், அதிமுக தேர்தல் அறிக்கையில் அரசி அட்டைதாரர்களுக்கு ஒரு ஆண்டுக்கு இலவசமாக 6 சிலிண்டர், வாஷிங் மெஷின் வழங்கப்படும் எனத் தெரிவித்திருந்தார்.


இந்நிலையில், தற்போது அரிசி, சர்க்கரை உள்ளிட்ட அனைத்து ரேஷன் அட்டைதார்களுக்கும் ஆண்டுக்கு 6 சிலிண்டர் வழங்கப்படும் என புதிய அறிவிப்பை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டிருக்கிறார். மேலும், நெசவாளர்களுக்கு வழங்கப்படும் இலவச மின்சாரம் 200 யூனிட்டிலிருந்து 1000 யூனிட்டாக உயர்த்தப்படும் எனவும் தேர்தல் அறிக்கையில் மாற்றம் அளித்து முதலமைச்சர் அறிவித்துள்ளார்.

சற்றுமுன் வெளியான தகவல் !!! மக்கள் மகிழ்ச்சி !!! சற்றுமுன் வெளியான தகவல் !!! மக்கள் மகிழ்ச்சி !!! Reviewed by eGovernance Helpdesk on March 21, 2021 Rating: 5

No comments:

Powered by Blogger.