March 31 கடைசி நாள் !! நீங்க பண்ண வேண்டிய 7 விஷயங்கள் !!!

 1. விடுமுறை பயண சலுகை (LTC cash voucher scheme)


மத்திய அரசு ஊழியர்களுக்கு நெருக்கடியான இந்த நேரத்தில் பெரும் நிவாரணம் அளிக்கும் வகையில், அரசு ஊழியர்களுக்கான எல்டிசி கேஷ் வவுச்சர் திட்டத்தை (LTC Cash Voucher Scheme) அறிவித்தது.

இந்த திட்டத்தின் கீழ் ஊழியர்கள் பயணம் செய்து பெறும் கொடுப்பனவை, பயணம் செய்யாமலேயே பணமாக பெறலாம்.

இந்த தொகையினை மார்ச் 31, 2021-க்கு முன் இதை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். ஊழியர்கள் இந்த தொகையை ஒரு குறிப்பிட்ட பொருள் அல்லது சேவையை பெற செலவழிக்க வேண்டும் என்பது தான்.

இந்த திட்டமானது மார்ச் 31வுடன் முடிவடையவுள்ளது. ஆக ஊழியர்களை இதனையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

2. 2019-20 நிதியாண்டிற்கான உங்கள் வருமான வரி வருமானத்தை (ITR) தாக்கல் செய்யவில்லை என்றால், ஐ.டி.ஆர் தாக்கல் செய்ய கடைசி தேதி மார்ச் 31 ஆகும்.

நீங்கள் அதை தவறவிட்டால், அபராதம் மற்றும் வட்டியுடன் சேர்த்து அபராதம் செலுத்த வேண்டியிருக்கும். வருமான வரிச் சட்டத்தில் 206AB பிரிவை அரசாங்கம் சேர்த்தது.

இந்த பிரிவின் படி, ITR இப்போது தாக்கல் செய்யப்படாவிட்டால், ஏப்ரல் 1, 2021 முதல் இரண்டு மடங்கு TDS செலுத்த வேண்டும். இதுக்குறித்து வருமான வரித் துறையிடமிருந்து ஒரு அறிவிப்பையும் பெறுவீர்கள். 3. வருமான வரி விலக்கு உரிமை கோர வேண்டும் என்றால், ஆயுள் காப்பீட்டு பிரீமியம் (LIC Premium) செலுத்துதல் , பிபிஎஃப் (PPF), வங்கிக் கணக்கில் முதலீடு, மருத்துவ உரிமைகோரல், 2020-21 மார்ச் 31 நிதியாண்டிற்கான தொண்டு அறக்கட்டளைகளுக்கு நீங்கள் அளித்த நன்கொடைகள் என அனைத்து விவரங்களையும் மார்ச் 31-க்குள் தாக்கல் செய்யவில்லை என்றால், மொத்த வருமானத்திற்கு அதிக வரி செலுத்த வேண்டியிருக்கும்.

4. பான் கார்டை ஆதார் அட்டையுடன் இணைக்க அரசாங்கம் அவசியமாக்கியுள்ளது. இதை இணைப்பதற்கான காலக்கெடு 31 மார்ச் 2021 ஆகும். ஏற்கனவே மத்திய அரசாங்கம் அதன் கடைசி தேதியை இதற்கு முன்னர் பல முறை நீட்டித்துள்ளது. இரண்டையும் இணைக்கவில்லை என்றால், உங்கள் பான் எண் இயங்காது. 5. நீங்கள் ஐ.டி.ஆர் (ITR) தாக்கல் செய்துள்ளீர்கள், ஆனால் அதில் ஏதேனும் தவறு இருந்தால், அதைத் திருத்தி தாக்கல் செய்வதற்கான காலக்கெடு 31 மார்ச் 2021 மட்டுமே.

இதற்குப் பிறகு, நீங்கள் எந்த திருத்தங்களையும் செய்ய முடியாது. மேலும், மார்ச் 31 க்குள் தாமதமாக வருமான வரி அறிக்கையை தாக்கல் செய்தால், நீங்கள் ரூ .10,000 வரை அபராதம் செலுத்த வேண்டியிருக்கும்.


ஆனால், இதில் சில நிவாரணங்கள் வழங்கப்பட்டுள்ளன. 6. முன்கூட்டிய வரி
வருடத்திற்கு 10000 ரூபாய்க்கு அதிகமான வருமான வரி செலுத்த வேண்டியவர்கள் அட்வான்ஸ் டாக்ஸ் எனப்படும் முன்கூட்டிய வரியை 4 பகுதிகளாகச் செலுத்த வேண்டும்.

இந்நிலையில் மார்ச் 15ஆம் தேதிக்குள் 2020-21 நிதியாண்டுக்கான 4வது பகுதியைச் செலுத்த வேண்டும்.

7. வருமான வரிச் சேமிப்பு 80சி பிரிவில் வருடத்திற்கு 1.5 லட்சம் ரூபாய் வரையிலான வருமான வரிச் சலுகை பெற முடியும்.

எனவை மார்ச் 31ஆம் தேதிக்குள் இப்பிரிவு சலுகையை முழுமையாகப் பெற வேண்டுமாயின் வரியைச் சேமிக்க மார்ச் 31ஆம் தேதிக்குள் முதலீடு செய்துகொள்ளுங்கள் இல்லையெனில் வருமான வரியாகப் பெரும் பகுதி தொகையை அரசு செலுத்த வேண்டி வரும்


March 31 கடைசி நாள் !! நீங்க பண்ண வேண்டிய 7 விஷயங்கள் !!! March 31 கடைசி நாள் !! நீங்க பண்ண வேண்டிய 7 விஷயங்கள் !!! Reviewed by eGovernance Helpdesk on March 25, 2021 Rating: 5

No comments:

Powered by Blogger.