ஏப்ரல் 1 முதல் இவையெல்லாம் செல்லாது

 🔥8 வங்கிகள் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு! 🔥ஏப்ரல் 1 முதல் இவையெல்லாம் செல்லாது! 🔥ஏப்ரல் 1 முதல் இந்த வங்கி கணக்குகள் முடக்கம்! 🔥மார்ச் 31 க்குள் நீங்கள் கட்டாயம் செய்ய வேண்டும் !!


🔥 8 வங்கிகளின் பாஸ்புக் ஏப்ரல் 1 முதல் செல்லாது – பொதுமக்களுக்கு எச்சரிக்கை!! 8 வங்கிகளின் பாஸ்புக் ஏப்ரல் 1 முதல் செல்லாது – பொதுமக்களுக்கு எச்சரிக்கை!! மத்திய நிதியமைச்சகமும், ரிசர்வ் வங்கியும் இணைந்து இந்திய வங்கிகளை வலிமையாக்க வேண்டும் என்ற நோக்கில் சிறு வங்கிகளை பெரு வங்கிகளுடன் இணைக்க உள்ளதாக அறிவிப்பு வெளியிட்டது.

இவ்வாறு இணைக்கப்பட்ட 8 வங்கிகளின் செக்புக், பாஸ்புக் போன்றவை ஏப்ரல் 1 ஆம் தேதி வரை மட்டுமே செல்லுபடியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வங்கிகள் குறித்த அறிவிப்பு: நாடு முழுவதும் கொரோனா காரணமாக பொருளாதாரம் பெரிதளவில் வீழ்ச்சி அடைந்துள்ளது.

இதன் காரணமாக வங்கிகளில் கடன் பெறுவோர் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.

இந்த கடன்கள் திரும்ப பெற முடியாத காரணத்தினால் வங்கிகள் திவாலாகும் நிலை ஏற்படுகிறது.

இதனை தடுக்கும் விதத்தில் மத்திய நிதியமைச்சகம் மற்றும் ரிசர்வ் வங்கி இணைந்து வங்கிகளை மீட்டெடுக்க ஒரு திட்டத்தை அமல்படுத்தியது. அதன்படி நாட்டில் உள்ள சிறு வங்கிகளான தேனா வங்கி, விஜயா வங்கி, கார்ப்பரேஷன் வங்கி, ஆந்திர வங்கி, சிண்டிகேட் வங்கி, ஓரியண்டல் வங்கி, யுனைடெட் பாங்க் ஆப் இந்தியா மற்றும் அலகாபாத் வங்கி போன்ற வங்கிகள் பெரு வங்கிகளுடன் இணைக்கப்பட்டது.


மேலும் அந்த வங்கிகளில் உள்ள வாடிக்கையாளர்களின் பாஸ்புக், செக்புக் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் செல்லாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறு வங்கி வாடிக்கையாளர்கள், இணைக்கப்பட்ட வங்கிகளில் உள்ள செக் புக் மற்றும் பாஸ்புக் பெற்றுக் கொள்ள வேண்டும்.

மேலும் அவர்களின் IFSC மற்றும் MICR கோட் போன்றவை மாற்றப்பட உள்ளது. புதிய வங்கிகளில் மாற்றப்பட்டவர்கள் மொபைல் எண், முகவரி, நாமினி பெயர் போன்றவற்றை புதுப்பிக்க வேண்டியது கட்டாயம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே பஞ்சாப் நேஷனல் வங்கி, அதனுடன் இணைக்கப்பட்ட பிற வங்கிகளில் உள்ள வாடிக்கையாளர்களை புதிய செக் புக் மற்றும் பாஸ்புக் பெற்றுக்கொள்ளுமாறு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இதே போல பிற வங்கிகளும் அறிவிப்பு வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
ஏப்ரல் 1 முதல் இவையெல்லாம் செல்லாது ஏப்ரல் 1 முதல் இவையெல்லாம் செல்லாது Reviewed by eGovernance Helpdesk on March 17, 2021 Rating: 5

No comments:

Powered by Blogger.