தமிழக அரசு வழங்கும் இலவச தையல் இயந்திரம் பெறுவது எப்படி? | Free Sewing Machine Scheme

  வணக்கம் நண்பர்களே!!

 இந்த பதிவில் மத்திய மற்றும் மாநில அரசு இணைத்து இலவச தையல் இயந்திரங்களை வழங்குகிறது. அதாவது சமூக நலத் துறை வாயிலாக செயல்படும் சத்தியவாணி முத்து அம்மையார் அவர்களின் நினைவாக தமிழக அரசால் இலவசமாக தையல் இயந்திரம் வழங்கப்படுகிறது.


சரி வாங்க சத்தியவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டம் பற்றிய முழுமையான விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.


 அதாவது இலவசமாக வழங்கும் இந்த தையல் இயந்திரத்தை யாரெல்லாம் விண்ணப்பித்து பெறலாம், இதற்கு தேவைப்படும் சான்றிதழ்கள் என்னென்ன என்பதை பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க.


விதவைகள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், ஆதரவற்றோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள், ஏழைப் பெண்கள் இவர்கள் அனைவரும் இந்த சத்தியவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டத்தில் பயன்பெறலாம். இவர்களுக்கு மின் மோட்டார் பொருத்தப்பட்ட தையல் இயந்திரம் இலவசமாக வழங்கப்படவுள்ளது.


இருப்பினும் இந்த தையல் இயந்திரத்தை பெற மாத வருமானம் ரூ. 12,000-க்குள் இருக்க வேண்டும். இருப்பிடம், தையல் பயிற்சி, வயது, சாதிச் சான்றிதழ்கள், 2 பாஸ்போர்ட் அளவு புகைப்படம், விதவை, கணவனால் கைவிடப்பட்டவர், ஆதரவற்ற மகளிர் மற்றும் மாற்றுத் திறனாளி பெண் என்பதற்கான சான்றிதழ், ஆதார் அடையாள அட்டை ஆகிய சான்றிதழ்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.

Documents Required


1, வயதுச் சான்றிதழ்
2, பாஸ்போர்ட் சைஸ் போட்டோ
3, வருமானச் சான்றிதழ்
4, ஆதார் அட்டை
5, அனுபவ சான்று
6, மொபைல் எண்
7, சொந்த கையொப்பம்
8, சாதி சான்றிதழ்
9, இருப்பிடச் சான்றிதழ்
10 உடல் ஊனமுற்றோர் சான்றிதழ்
11,கணவனால் கைவிடப்பட்டோர் அல்லது உதவி சான்றிதழ்


Eligibility Criteria

  • விண்ணப்பதாரர்கள் தமிழ்நாட்டில் வசிப்பவராக இருத்தல் வேண்டும், முகவரி தமிழ்நாட்டில் இருத்தல் வேண்டும்.
  • வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ளவராக இருத்தல் வேண்டும் (இந்த சான்றிதழை உங்களது கிராம நிர்வாக அலுவலரிடம் நீங்கள் பெறலாம்) விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரரின் வயது 18 முதல் 40 வயதுக்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.
  • மகளிர்சுய உதவிக் குழுக்களின் மூலம் பயிற்சி பெற்று பெறப்பட்ட சான்றிதழ்களையும் ஒரு ஆவணமாக சமர்ப்பிக்கலாம்.

Free Sewing Machine Scheme in Tamil – பூர்த்தி செய்த விண்ணப்பங்களை உங்கள் மாவட்டத்தில் உள்ள சமூகநலத்துறைக்கு(உங்கள் மாவட்டத்தின் பெயர்) என்ற முகவரிக்கு தபால் மூலமாகவோ அல்லது பதிவு தபால் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம் அல்லது நேரில் சென்றோ கொடுக்கலாம்.

தமிழக அரசு வழங்கும் இலவச தையல் இயந்திரம் பெறுவது எப்படி? | Free Sewing Machine Scheme தமிழக அரசு வழங்கும் இலவச தையல் இயந்திரம் பெறுவது எப்படி? | Free Sewing Machine Scheme Reviewed by eGovernance Helpdesk on July 17, 2021 Rating: 5

No comments:

Powered by Blogger.