நாடு முழுவதும் மார்ச் 1 முதல் நடைமுறைக்கு வரும் புதிய மாற்றங்கள் !!! மக்கள் அதிர்ச்சி !!

 தமிழகம் முழுவதும் மார்ச் 1 ஆம் தேதியிலிருந்து நடைமுறைக்கு வரும் புதிய அறிவிப்புகள் :


மார்ச் மாதத்தில் 11 நாட்கள் வங்கிகள் செயல்படாது. 


வருடாந்திர கணக்கு முடியும் இந்த மாதத்தில் மார்ச் 5, 11, 22, 29 மற்றும் 30ஆம் தேதி வங்கிகள் விடுமுறை நாட்களாகும்.


மேலும் நான்கு ஞாயிறு மற்றும் 2 சனிக்கிழமைகள் விடுமுறை நாட்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.


வங்கிகளில் பணம் செலுத்த / எடுக்க விரும்புவோர் முன்கூட்டியே பரிவர்த்தனை செய்துகொள்ளவும்.



2. உங்கள் வங்கி கணக்குடன் ஆதாரை இணைக்க மார்ச் 31 கடைசி தினமாகும்,


இதுவரை உங்கள் ஆதார் இணைக்காமல் இருந்தால் கண்டிப்பாக இணைத்துக்கொள்ளவும்.


3. எஸ் பி ஐ வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்கள் மார்ச் 1 ஆம் தேதியிலிருந்து பரிவர்த்தனை செய்வதற்கு KYC கண்டிப்பாக இணைந்திருக்க வேண்டும்.


இதுவரை இணைக்காமல் இருந்தால் உடனே இதனை செய்யவும். உங்கள் வங்கி கணக்கு செயலில் இருக்கவேண்டும் என்றால் உங்கள் பெயர், முகவரி விபரங்களை Update செய்துகொள்ளவும்.



4.  2000 ரூபாய் நோட்டுகளை ATM -ல் இருந்து எடுக்கமுடியாது.


இந்தியன் வங்கி ATM கிளைகளில் இனிமேல் 2000 ரூபாய் நோட்டுகள் ஏற்றப்படாது என வங்கி அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளது.


உங்களுக்கு கட்டாயமாக 2000 ரூபாய் நோட்டுகள் தான் வேண்டுமென்றால் வங்கிகளுக்கு சென்று பணம் எடுத்துக்கொள்ளலாம்.



5. மார்ச் 1 ஆம் தேதியிலிருந்து சுங்க சாவடிகளில் FASTAG கட்டாயமாக்கப்பட்டுள்ளது. 


உங்களிடம் இல்லையென்றால் இனிமேல் 100 ரூபாய் கொடுத்து மட்டுமே வாங்கிகொள்ளமுடியும்.



6. சமையல் சிலிண்டர் விலை மேலும் 25 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது.


சென்னையில் சமையல் சிலிண்டரின் விலை இன்று 25 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது, ஏற்கனவே பிப்ரவரி மாதத்தில் 100 ரூபாய் உயர்ந்தது குறிப்பிடத்தக்கது.


தற்பொழுது ஒரு சிலிண்டரின் விலை 835 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.



7. இந்தியாவில் எப்போதும் இல்லாத அளவிற்கு பெட்ரோல் , டீசல், சமையல் எரிவாயு விலை உயர்ந்துள்ளது. 


ஒரு சில மாநிலங்களில் டீசல் 90 ரூபாய்க்கு மேல் விற்கப்படுகிறது. பெட்ரோல் 100 ரூபாய்க்கு மேல் உள்ளது.


மேலும் மார்ச் மாதத்தில் இன்னும் விலை உயரும் என தெரியவருகிறது.


குளிர்காலம் தொடங்கியபின் தான் இந்த விலை உயர்வு கட்டுக்குள் கொண்டுவர முடியும் என இந்திய பெட்ரோலிய துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.


நாடு முழுவதும் மார்ச் 1 முதல் நடைமுறைக்கு வரும் புதிய மாற்றங்கள் !!! மக்கள் அதிர்ச்சி !! நாடு முழுவதும் மார்ச் 1 முதல் நடைமுறைக்கு வரும் புதிய மாற்றங்கள் !!! மக்கள் அதிர்ச்சி !! Reviewed by eGovernance Helpdesk on March 01, 2021 Rating: 5

No comments:

Powered by Blogger.