தமிழகத்தில் தேர்தல் தேதி அறிவிப்பு !! ஏப்ரல் 6ஆம் தேதி தேர்தல் !! மே 2ஆம் தேதி முடிவுகள் | TN ELECTIONS 2021
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 06 ஆம் தேதியன்று தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது
தமிழகத்தின் நடப்பு சட்டப்பேரவையான 15வது சட்டப்பேரவையின் பதவிக்காலம், 2021ஆம் ஆண்டு மே 23ம் தேதியுடன் முடிவடைகிறது.
2021ஆம் ஆண்டு மே 24 ஆம் தேதிக்குள் 16வது சட்டப்பேரவையைத் தேர்வு செய்வதற்கான தேர்தல் இந்திய தேர்தல் ஆணையத்தால் தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டு, அதற்குள் புதிய சட்டப்பேரவை பதவியேற்க வேண்டும்.
நாடு முழுவதும் ஐந்து மாநிலங்களில், அதாவது தமிழகம், கேரளா, அசாம், புதுச்சேரி, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.
சட்டமன்ற தேர்தல் குறித்து ஆய்வு செய்ய சமீபத்தில் தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தமிழகம் வந்தார்.
முன்னதாக அவர் அசாம், மேற்குவங்கம் ஆகிய மாநிலங்களுக்கு சென்று அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய நிலையில் தமிழகம் வந்த அவர் புதுச்சேரி, கேரளா ஆகிய மாநிலங்களுக்கு சென்று ஆய்வு நடத்தினார்.
மேலும் முக்கிய அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
இந்நிலையில் சற்றுமுன் செய்தியாளர்களை சந்தித்து பேசிய சுனில் அரோரா வரும் மார்ச் 22 ஆம் தேதி தமிழகத்திற்கான சட்டமன்ற தேர்தல் நாள் என அதிகாரபூர்வமாக அறிவித்தார்.
ஒரு வாக்குச்சாவடியில் 1000 பேர் மட்டுமே வாக்களிக்க ஏற்பாடு.
கடந்த தேர்தலை ஒப்பிட்டு பார்த்தல் 34.73 % அதிக வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட உள்ளன. வாக்குப்பதிவு நேரம் ஒரு மணி நேரம் அதிகரிப்பு.
தமிழகத்தில் மொத்தம் 88,936 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளன
அதே போல் கேரளாவில் ஏப்ரல் 06 ஆம் தேதியும்,அசாம் மார்ச் 27 தேர்தல்,புதுவையில் ஏப்ரல் 06 ஆம் தேதியும் நடத்தப்படும் என அறிவித்தார்.
மே 2ஆம் தேதி ஐந்து மாவட்டங்களிலும் தேர்தல் முடிவுகள் வெளியாகும்
No comments: