விவசாய கடன்கள் அனைத்தும் தள்ளுபடி !! மாஸ் காட்டும் முதல்வர் ! Waiver of Crop Loans taken from Co Operative Societies

 அனைவருக்கும் வணக்கம் !!!


தமிழ்நாடு அரசு விவசாயிகளுக்கு மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்டுள்ளது. விவசாய கடன்கள் அனைத்தும் தள்ளுபடி !!!





தமிழ்நாடு சட்ட மன்ற பேரவையின் 110 விதிகளின் படி முதல்வரின் உரை விவசாய கடன்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்படும் எனும் அதிகார பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. 


இந்த அரசாணையில் பின்வருமாறு செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன.


மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு எடப்பாடி k.பழனிசாமி அவர்கள் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி எண் 110 இன் கீழ் ஆற்றிய உரை


 உழுவார் உலகத்தார்க்கு ஆணிஅஃ தாற்றாது

 எழுவாரை எல்லாம் பொறுத்து


 எனும் வள்ளுவப் பெருந்தகையின் பொய்யாமொழி.  உழவுத்தொழில் அன்றி பிற தொழில்களை செய்யும் அனைவரும் உறவுகளை தாங்குவதால் அவர்களே இந்த உலகத்திற்கான அச்சாணி போன்றவர்கள். 



ஒரு நாட்டின் வளம் அந்த நாட்டின் விவசாயத்தை பொருத்தே அமையும் அதனால் மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்கள் வேளாண்மை உள்ளிட்ட முதன்மை துறைகளுக்கு அதிக முக்கியத்துவம் வழங்கி பல திட்டங்களை தீட்டி அதனை செயல்படுத்த அதிக நிதி ஒதுக்கீடு வழங்கினார்கள். 


 அதே வழியை பின்பற்றி எனது தலைமையிலான அரசும் வேளாண் பெருமக்களின் நலம் பேணவும் வேளாண்மை செழிக்கவும் பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. 


 குடிமராமத்து மற்றும் பல்வேறு நீர்ப்பாசன மேம்பாட்டு திட்டங்கள் மூலம் சிறப்பான நீர் மேலாண்மை திட்டங்கள், வேளாண்தொழில் செழிக்க நுண்ணீர் பாசனம், ஒருங்கிணைந்த பண்ணையம், கூட்டு பண்ணையம், வேளாண் விற்பனை மையங்கள் மேம்பாடு, காய்கறி பழங்கள் சாகுபடியை ஊக்குவிக்க சந்தை தொடர் கூட்டமைப்பு திட்டம்,  உயர் தொழில் நுட்ப சாகுபடி, பயிர் காப்பீட்டுத் திட்டம் என பல்வேறு திட்டங்களை எனது தலைமையிலான அரசு மூலமாக செயல்படுத்தப்பட்டுள்ளது. 


 விவசாயம் சார்ந்த தொழில்களான கால்நடை பராமரிப்பு, மீன்வளம் போன்ற துறைகளிலும் வியக்கத்தக்க முன்னேற்றத்தை தமிழ்நாடு அரசு கண்டுள்ளது.

 அதனால்தான் மாநில மொத்த உற்பத்தி மதிப்பில் கால்நடை துறையின் பங்கு அதிகரித்து வருகிறது. 



 விவசாயிகளுக்கு துயர் எழும்போதெல்லாம் மாண்புமிகு அம்மா அவர்களின் அரசு உதவிக்கரம் நீட்டி அவர்களை காப்பதில் முன்னணியில் இருந்து வருகிறது.

 அதனால்தான் 2016ஆம் ஆண்டு புரட்சி தலைவி அம்மா அவர்கள் மீண்டும் ஆட்சிப் பொறுப்பை ஏற்றவுடன் 31 2016 வரை இருந்த 5318.73 கோடி ரூபாய் விவசாயக் கடனை தள்ளுபடி செய்தார். 


 இதனால் 12.2 லட்சம் சிறு குறு விவசாயிகள் பயன் பெற்றனர். 


 2017 ஆம் ஆண்டில் ஏற்பட்ட கடும் வறட்சியின் காரணமாக இழப்பை சந்தித்த விவசாய பெருமக்களுக்கு 2747 கோடி ரூபாய் வறட்சி நிவாரண தொகையாக மாண்புமிகு அம்மாவின் அரசு வழங்கியது. 


 இதைத் தொடர்ந்து விவசாயிகளின் வாழ்வு செழிக்க பல்வேறு நலத் திட்டங்களும் மேலான் கட்டமைப்பை மேம்படுத்தும் திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. 


2019-2020 ஆம் ஆண்டில் கொரோனா  காரணமாக உலக நாடுகள் பலவும் பெரும் பாதிப்புக்கு உள்ளான. 


தமிழ்நாட்டிலும் இதன் தாக்கம் இருந்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்புக்கு உள்ளாகியது. இந்நிலையில் விவசாயமும் பாதிப்புக்கு உள்ளாகியது.

 மேலும் நிவர், புரவி போன்ற புயல்களும், அதைத் தொடர்ந்து சென்ற மாதம் பருவம் தவறி பெய்த கடும் மழையால் பயிர் சேதத்தை ஏற்படுத்தியதால் கடன்பெற்று பயிர் சாகுபடி செய்த விவசாயிகள் அனைவரும் அல்லலுக்கு உள்ளாகினர். 


 இந்தப் பேரிடர் அறுவடைக்கு தயாராக இருந்த நெல் கரும்பு வாழை போன்ற பயிர்களை மட்டுமல்லாது மானாவாரி பெயர்களையும் பெருமளவில் சேதப்படுத்தியது. 


விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கும் விதத்தில் உதவி தொகை 1817 கோடி ரூபாயை 16.43 லட்சம் விவசாயிகளுக்கு உடனடியாக வழங்க உத்தரவிட்டு அந்த தொகையை நேரடியாக விவசாயிகள் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டது. 


 கீழே விழுந்த கைகளை மேலே தூக்கி விட்டால் மட்டும் போதாது அவர்கள் மேலும் வலுபெற உதவி செய்திட வேண்டும் என்ற உயரிய சிந்தனையின் எனது தலைமையிலான மாண்புமிகு அம்மாவின் அரசு செயல்பட்டு வருகின்றது.


 எனவே தற்போது உள்ள சூழ்நிலையை கருத்தில் கொண்டு கூட்டுறவு வங்கிகளில் பயிர் கடன் பெற்ற 16.43 லட்சம் விவசாயிகளின் கடன் நிலுவைத் தொகையான 12,110 கோடியையும் தள்ளுபடி செய்யும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளது.


Download Official Press Release from Govt: 

விவசாய கடன்கள் அனைத்தும் தள்ளுபடி !! மாஸ் காட்டும் முதல்வர் ! Waiver of Crop Loans taken from Co Operative Societies விவசாய கடன்கள் அனைத்தும் தள்ளுபடி !! மாஸ் காட்டும் முதல்வர் ! Waiver of Crop Loans taken from Co Operative Societies Reviewed by eGovernance Helpdesk on February 05, 2021 Rating: 5

No comments:

Powered by Blogger.