வலிமை படத்தின் Update !!! தல அஜித்தின் வருத்தம் !! புதிய அறிக்கை !!! Valimai Update

வலிமை படத்தின் Update !!! தல அஜித்தின் புதிய அறிக்கை !!!



ஒரு வருடத்திற்கும் மேலாக படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில் படத்தின் டைட்டில் ‘வலிமை'என்பதைத் தவிர படத்தை பற்றிய எந்த ஒரு அறிவிப்பும் வெளியாகாததால் ரசிகர்கள் அதிருப்தி அடைந்தனர்.

படக்குழு சரியான நேரத்தில் அறிவிப்பு வரும் என்று தெரிவித்திருந்தாலும் முருக கடவுள் தொடங்கி முதலமைச்சர் வரை அனைவரிடமும் தொடர்ச்சியாக அப்டேட் கேட்டு வந்தனர் அஜித்தின் தீவிர ரசிகர்கள்.




இது குறித்து அஜித் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “கடந்த சில நாட்களாக என் ரசிகர்கள் என்ற பெயரில் நடித்திருக்கும் ‘வலிமை' சம்பந்தப்பட்ட அப்டேட் கேட்டு அரசு, அரசியல், விளையாட்டு மற்றும் பல்வேறு இடங்களில் சிலர் செய்து வரும் செயல்கள் என்னை வருத்தமுற செய்கிறது.

முன்னரே அறிவித்தபடி படம் குறித்த செய்திகள் உரிய நேரத்தில் வரும். அதற்கான காலத்தை, நேரத்தை நான் தயாரிப்பாளருடன் ஒருங்கிணைந்து நிர்ணயம் செய்வேன்.


அதுவரை பொறுமையுடன் காத்திருக்கவும். உங்களுக்கு சினிமா ஒரு பொழுதுபோக்கு மட்டுமே.

எனக்கு சினிமா ஒரு தொழில். நான் எடுக்கும் முடிவுகள் என் தொழில், மற்றும் சமூக நலன் சார்ந்தவை.




நம் செயல்களே சமூகத்தில் நம் மீதுள்ள மரியாதையை கூட்டும்.


இதை மனதில் கொண்டு ரசிகர்கள் பொது வெளியிலும், சமூகவலைதளங்களிலும் கண்ணியத்தையும், கட்டுப்பாட்டையும் கடைபிடிக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.

என் மேல் உண்மையான அன்பு கொண்டவர்கள் இதை உணர்ந்து செயல்படுவார்கள் என நம்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்

வலிமை படத்தின் Update !!! தல அஜித்தின் வருத்தம் !! புதிய அறிக்கை !!! Valimai Update வலிமை படத்தின் Update !!! தல அஜித்தின் வருத்தம் !! புதிய அறிக்கை !!! Valimai Update Reviewed by eGovernance Helpdesk on February 15, 2021 Rating: 5

No comments:

Powered by Blogger.