UPI Payments Not Working for Few Days NPCI Official Announcement | அடுத்த சில நாட்களுக்கு UPI Payments செயல்படாது

 அடுத்த சில நாட்களுக்கு UPI Payments செயல்படாது  !! அதிகாரபூர்வ அறிவிப்பு !!




மக்கள் அனைவரும்  அதிகமாக பயன்படுத்தும் வங்கி பணபரிமாற்றத்திற்கான UPI செயலிகளான கூகுள் பே, phonepe , whatsapp pay போன்ற செயலிகளில் அடுத்த இரண்டு நாட்களுக்கு செயல்படாது என NPCI அதிகாரபூர்வாமாக தெரிவித்துள்ளது.



அடுத்த இரண்டு அல்லது 3 நாட்களுக்கு UPI செயலிகள் இரவு 1மணி முதல் 3 மணி வரை செயல்படாது என தெரிவித்துள்ளது.


UPI இயங்குதளத்தின் பயன்பாடுகள் மற்றும் பாதுகாப்பினை மேலும் அதிகப்படுத்தும் வகையில் புதிய மாற்றங்கள் செய்யப்படவுள்ளன. இது குறித்த அறிவிப்பை NPCI தனது TWITTER பக்கத்தில் அறிவித்துள்ளது.





குறிப்பிட்ட நேரத்தில் UPI மூலமாக பணம் செலுத்துவதை தவிர்த்து முன்கூட்டியே ஒரு சில ஏற்பாடுகள் செய்துகொள்ளவும் தெரிவிக்கப்பட்டுள்ளது,


நாளுக்குநாள் அதிகரித்து வரும் UPI பரிவர்தனைகளில் Google Pay மற்றும் Phonepe நிறுவனங்கள் அதிக பயனாளர்களை கொண்டுள்ளது.


டிசம்பர் மாத கணக்கெடுப்பின்படி Phonepe 185மில்லியன் பயனாளர்களையும், Google Pay 167 மில்லயன் பயனாளர்களையும் கொண்டுள்ளது.


UPI Payments வசதிமூலமாக வங்கி பரிவர்த்தனை செய்வதற்கு தற்பொழுது வரை 165 வங்கிகள் இணைக்கப்பட்டுள்ளன.



வளர்ந்து வரும் இந்த UPI வசதியை சைபர் அச்சுறுத்தல்களிடம் இருந்து பாதுகாக்கவும், வசதிகளை மேம்படுத்தவும் இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.


மேலும் UPI பயன்பாடுகளுக்கும் NPCI மூலமாக புதிய கட்டுப்பாடுகளும் கொண்டுவரப்பட்டுள்ளன.


UPI Payments Not Working for Few Days NPCI Official Announcement | அடுத்த சில நாட்களுக்கு UPI Payments செயல்படாது UPI Payments Not Working for Few Days NPCI Official Announcement | அடுத்த சில நாட்களுக்கு UPI Payments செயல்படாது Reviewed by eGovernance Helpdesk on January 22, 2021 Rating: 5

No comments:

Powered by Blogger.