Download Your Digital Voter ID at Free of Cost - Special Announcement.

 அனைவருக்கும் வணக்கம் !!

 இந்திய தேர்தல் ஆணையம் டிஜிட்டல் வடிவத்தில் வாக்காளர்களிடம் செய்வதற்கு புதிய வழிமுறைகளை கொண்டுவந்துள்ளது.


 ஜனவரி 25ஆம் தேதி தேசிய வாக்காளர் தினத்தை இன்று இந்த புதிய நடைமுறை கொண்டு வரப்பட்டுள்ளது.




இனி மக்கள் அனைவரும் தங்களுடைய வாக்காளர் அடையாள அட்டையை டிஜிட்டல் வடிவத்தில் டவுன்லோட் செய்து கொள்ள முடியும்.

 இதற்காக நீங்கள் எந்தவொரு செலவும் பண்ண தேவையில்லை. இலவசமாகவே நீங்கள் ஆன்லைனில் டவுன்லோட் செய்து கொள்ளலாம். 


 இந்தியாவில் இந்த டிஜிட்டல்  வாக்காளர் அடையாள அட்டை கொண்டு வருவது இதுவே முதல் முறையாகும். 


 இந்த வருடம் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் மக்கள் நிறைய பேர் இப்பொழுது வாக்காளர் அட்டைக்கு விண்ணப்பித்துள்ளனர்.


 தற்போது அவர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டை Print செய்யும் பணிகள் நடைபெற்றுக் கொண்டுள்ளன. எனினும் மக்கள் அனைவருக்கும் எளிதாக  தொலைபேசி மூலமாகவே டவுன்லோட் செய்து கொள்ளலாம். 


 ஆதார் பேன் கார்டு எப்படி இதுவரை டிஜிட்டல் வடிவத்தில் உள்ளனவோ அது போலவே  நீங்கள் வாக்காளர் அடையாள அட்டையையும் டிஜிட்டல் வடிவத்தில் பெறலாம். 


 டிஜிட்டல் ஓட்டர் ஐடி சிறப்பம்சங்கள்


 வாக்காளர் அடையாள அட்டை யாரும் திருத்த முடியாத வடிவத்தில் PDF  ஆக Download செய்துகொள்ளலாம். எனவே மிகவும் பாதுகாப்பானது. 


 முதலில் ஜனவரி 25 முதல் 31ஆம் தேதி வரை புதிதாக வாக்காளர் அட்டைக்கு  விண்ணப்பித்தவர்கள் மட்டும் எந்த வடிவத்தில் நீங்கள் உங்கள் மொபைல் நம்பரை மட்டும் வைத்து டவுன்லோட் செய்துகொள்ளலாம். 


 பிப்ரவரி 1ஆம் தேதியிலிருந்து அனைத்து வாக்காளர்களும் தங்களுடைய வாக்காளர் அடையாள அட்டையை டவுன்லோட் செய்து கொள்ளலாம். 


 இந்த அட்டையை டவுன்லோட் செய்வதற்கு நீங்கள் கண்டிப்பாக வாக்காளர் அடையாள அட்டையில்  மொபைல் நம்பரை இணைத்திருக்க வேண்டும்,. 


 புதிய வாக்காளர்களுக்கு கூடிய விரைவில் வண்ண புகைப்படத்துடன் கூடிய தரப்படும். 


 இந்த வசதியின் மூலமாக வாக்காளர் அட்டையை Digital வடிவத்தில் விரைவாக Download செய்துகொள்ளலாம்.


 வாக்காளர் அடையாள அட்டையை டிஜிலாக்கர் எனும் இந்திய அரசின் செயலியில் கூட நீங்கள் டவுன்லோட் செய்து கொள்ளலாம். 


 இந்த டிஜிட்டல் வாக்காளர் அடையாள அட்டையில் உங்களுக்கு பாதுகாப்பான க்யூ ஆர் கோடு குறியீடுகளும் இருக்கும். 

 இந்த ஒரு சிறப்பு திட்டமான தேசிய வாக்காளர் தினம் தின்று கொண்டு வரப்பட்டது மக்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியான செய்தியாகும். 


 டிஜிட்டல் ஓட்டர் ஐடி டவுன்லோட் செய்வதற்கு

https://voterportal.eci.gov.in/

Download Your Digital Voter ID at Free of Cost - Special Announcement. Download Your Digital Voter ID at Free of Cost - Special Announcement. Reviewed by eGovernance Helpdesk on January 24, 2021 Rating: 5

No comments:

Powered by Blogger.