Tamil Nadu Elections 2021 - How to Verify Your Name in Voters List | Download Voter ID Online | NVSP
TN Elections 2021 -தமிழ்நாடு தேர்தல் 2021
இறுதி வாக்காளர் பட்டியல் தேர்தல் ஆணையத்தின் மூலமாக வெளியிடப்பட்டுள்ளது. இந்த வருடம் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் வாக்காளர் பட்டியல் தற்பொழுது வெளியிடப்பட்டுள்ளது.
வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்த்தல், முகவரி மாற்றம் செய்தவர்கள் தங்களின் விபரங்களை சரிபார்த்துக்கொள்ளலாம்.
மேலும் வாக்காளர் அட்டையை அட்டையை ஆன்லைன் மூலமாக பதிவிறக்கம் செய்யலாம்.
வாக்காளர் விபரங்களில் சரிபார்ப்பது எப்படி?
இந்திய தேர்தல் ஆணையத்தின் அதிகாரபூர்வ இணையதளத்திற்கு செல்லவும்.
NVSP.in
உங்களின் முகப்பு பக்கத்தில் Search Name in Electoral Role எனும் Option -ஐ Click செய்யவும்.
வாக்காளர் விபரங்களை தேடுவதற்கு இரண்டு வசதிகள் உள்ளன.
Search By Details
Search By EPIC Number
உங்களிடம் வாக்காளர் அட்டை எண் இருந்தால் அதனை மட்டும் உள்ளீடு செய்து சரிபார்க்கலாம்.
புதிதாக விண்ணப்பித்தவர்களிடம் வாக்காளர் அட்டை எண் இருக்காது. உங்களின் விபரங்களை சரியாக பூர்த்தி செய்து சரிபார்க்கலாம்.
உங்கள் பெயர் இருந்தால் , அனைத்து விபரங்களையும் சரிபார்க்க View Information எனும் Button -ஐ Click செய்யவும்.
வாக்காளர் விபரங்களை PDF வடிவத்தில் Printசெய்துகொள்ளலாம்.
இந்த விபரங்களை வாக்காளர் அடையாள அட்டையாக தற்காலிகமாக பயன்படுத்திக்கொள்ளலாம்.
Digital Voter ID பெறுவது எப்படி?
தேர்தல் ஆணையம் Digital Voter ID பதிவிறக்கம் செய்துகொளவதற்காக புதிய Option -ஐ தேசிய வாக்காளர்கள் தினமான ஜனவரி 25ஆம் தேதி Mobile App மூலமாக தரவுள்ளது.
Voters Helpline எனும் App -ஐ Playstore மூலமாக Download செய்துகொள்ளலாம்.
மேலும் வாக்காளர் அட்டை தொடர்பான அனைத்து சேவைகளையும் இந்த Application மூலமாக பெறலாம்.
Color Votor ID பெறுவது எப்படி?
வண்ண புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அட்டை தற்பொழுது அனைத்து வாக்காளர்களுக்கும் BLO மூலமாக தரப்படுகிறது.
மேலும் நீங்களே Online மூலமாக இந்த Card பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம்.
தமிழ்நாடு முழுவதும் உள்ள வட்டாச்சியர் அலுவலகத்தில் உள்ள அரசு eSevai மையங்களிலும் இந்த Card Print செய்துகொள்ளலாம்.
இதற்கான சேவை கட்டணம் 25ரூபாய் மட்டுமே !!
No comments: