தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு வெளியான புதிய தகவல் | TN Schools Reopen Date Announced !! Special News from Minister |

10 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வரும் 19-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.


கொரோனா பரவல் காரணமாக கடந்தாண்டு மார்ச் மாதம் 25-ஆம் தேதி முதல் பள்ளிகள் மூடப்பட்டன. 

அதனை தொடர்ந்து ஆன்லைன் வாயிலாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.





இந்நிலையில் பொதுத்தேர்வு எழுதவுள்ள 10 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பது குறித்து கடந்த ஆறு முதல் எட்டாம் தேதி வரை பெற்றோர்களிடம் கருத்துக்கேட்பு கூட்டம் நடத்தப்பட்டது.

இதில் பெரும்பான்மையான பெற்றோர்கள் பள்ளிகள் திறக்க ஆதரவு அளித்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.


இதனால், வரும் 19-ஆம் தேதி முதல் பொதுத்தேர்வு எழுதவுள்ள 10 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு வகுப்பறையில் 25 மாணவர்களுக்கு மிகாமல் அமர ஏற்பாடு செய்யவும், பள்ளிகளுக்கு வரும் மாணவர்களுக்கு விடுதிகளை திறக்கவும் அரசு உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும், அனைத்து மாணவர்களுக்கும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வைட்டமின் மற்றும் துத்தநாக மாத்திரைகள் வழங்க சுகாதாரத்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

விருப்பமுள்ள 10, 12ஆம் வகுப்பு மாணவர்கள் பள்ளிகளுக்கு வரலாம். 98 சதவீத மாணவர்கள் பள்ளிக்கு வர விருப்பம் தெரிவித்துள்ளனர். 

எனவே அவர்களின் நலனில் அக்கறை காட்ட வேண்டியது அரசின் கடமை. இதையொட்டி நோய் எதிர்ப்பு சக்தியை ஏற்படுத்தும் மருந்துகளை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஸ்மார்ட் கார்டை பயன்படுத்தி அரசுப் பேருந்துகளில் மாணவர்கள் பள்ளிக்குச் செல்லலாம். பொதுத் தேர்விற்கு தயாராகும் மாணவர்கள் முதலில் பள்ளிக்கு வரட்டும். 

அதன் பிறகு ஆய்வு செய்து படிப்படியாக பிற வகுப்புகளும் திறக்கப்படும். தமிழக சட்டமன்ற தேர்தல் அட்டவணை வந்த பிறகு, பள்ளி பொதுத்தேர்வு தேதி குறித்து முடிவு செய்து அறிவிக்கப்படும் என்றார்.
தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு வெளியான புதிய தகவல் | TN Schools Reopen Date Announced !! Special News from Minister | தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு வெளியான புதிய தகவல் | TN Schools Reopen Date Announced !! Special News from Minister | Reviewed by eGovernance Helpdesk on January 14, 2021 Rating: 5

No comments:

Powered by Blogger.