வீடு கட்டுவோருக்கு மகிழ்ச்சியான செய்தி !!! முதல்வர் அறிவிப்பு | Pradan Mantri Awas Yojana - Tamilnadu Govt Contribution Increased

 பிரதம மந்திரி வீட்டு வசதி வாரியத்தின் கீழ் அரசு மூலமாக அனைவருக்கும் வீடு கட்டும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது


 இந்த திட்டத்தில் மத்திய அரசு மற்றும் மாநில அரசும் இரண்டு பேரின் பங்களிப்புகளும் இருக்கும். 


இதில் தமிழக அரசின் பங்களிப்பு 2 லட்சத்து 75 ஆயிரமாக உயர்த்தி எடப்பாடி பழனிசாமி அவர்கள் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.




 பிரதமரின் குடியிருப்புத் திட்டத்தின் கீழ் தமிழக அரசால் வழங்கப்படும் நிதியுதவி 2 லட்சத்து 75 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது பிரதமரின் குடியிருப்புத் திட்டத்தின் கீழ் தமிழக அரசால் வழங்கப்படும் நிதியுதவி 2 லட்சத்து 75 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது


 ஒருவரிடமும் இந்தத் திட்டத்திற்காக தமிழக அரசால் நிதி உதவிகள் ஒதுக்கீடு செய்யப்படும். 


 இந்த வருடத்திற்கு 1805 கோடி கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 


 இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் அறிவித்துள்ளார். 


 இதுகுறித்து அரசு வெளியிட்ட அறிக்கையில் பிரதம மந்திரி குடியிருப்பு திட்டம் மத்திய அரசு பங்களிப்பு குறித்து தமிழ்நாட்டில் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. 


 இந்த திட்டம் 2016 ஆம் ஆண்டு முதல்  இந்த திட்டம் 2016 ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது.


தமிழ்நாட்டில் இதுவரையிலும் 6 ஆயிரத்து 968 கோடி மதிப்பில் 5 லட்சத்து 27 ஆயிரத்து 552 வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.


 தற்பொழுது 401848 வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. 


 பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தில் ஊரகப் பகுதிகளில் ஒரு வீட்டிற்கான அளவு தொகை ஒரு லட்சத்து 20 ஆயிரம் ஆகும் இதில் மத்திய அரசின் பங்குத் தொகை 72 ஆயிரம் மற்றும் மாநில அரசின் பங்குத் தொகை 48,000.


 இத்துடன் கான்கிரீட் மேற்கூரை அமைப்பதற்காக தமிழ்நாடு அரசு கூடுதல் நிதியாக ரூபாய் 50,000 ஒவ்வொரு வீட்டிற்கும் அளித்து வருகிறது இந்த இடம் ஒரு வீட்டிற்கான மொத்த அளவு தொகை  ரூபாய் 170000.


 இத்துடன் சேர்த்து மகாத்மா காந்தி தேசிய ஊரக திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள ஊதியத்தின் அடிப்படையில் 90 மனித சக்தி நாட்களுக்கான ஊதியம் 23 ஆயிரத்து 40 மற்றும் தனிநபர் இல்ல கழிப்பறை கட்டும் பணிகளுக்கு ரூபாய் 12,000 ஒருங்கிணைந்து  வழங்கப்படுகிறது. 


 இந்தத் திட்டத்தின் செயல்பாடுகள் ஆய்வு செய்யப்பட்ட நிலையில் தற்போது கட்டுமானப் பொருட்களின் விலை ஏற்றம் காரணமாக காலத்தில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. 


 இவற்றை கருத்தில் கொண்டு குடியிருப்பு வீடுகள் கட்டுவதற்காக தற்போது 1, 70, 000 ரூபாயிலிருந்து 2, 40,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. 


 இந்த தொகையுடன் சேர்ந்து தேசிய மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் மூலம் வழங்கப்படும் 23,040 ரூபாய் மற்றும் தனிநபர் இல்ல கழிப்பறை கட்டணமாக 12000 ரூபாய் சேர்த்து மொத்தமாக ஒரு வீட்டிற்கு 2 லட்சத்து 75 ஆயிரத்து 40 ரூபாய் வழங்கப்படும்.


 இந்தத் திட்டத்தினால் சுமார் 2 லட்சத்து 50 ஆயிரம் பயனாளிகள் இப்போது பயன்பெறுவர்.

வீடு கட்டுவோருக்கு மகிழ்ச்சியான செய்தி !!! முதல்வர் அறிவிப்பு | Pradan Mantri Awas Yojana - Tamilnadu Govt Contribution Increased வீடு கட்டுவோருக்கு மகிழ்ச்சியான செய்தி !!! முதல்வர் அறிவிப்பு  | Pradan Mantri Awas Yojana - Tamilnadu Govt Contribution Increased Reviewed by eGovernance Helpdesk on January 14, 2021 Rating: 5

2 comments:

Powered by Blogger.