How to Check Adhaar Authentication History Online | உங்க ஆதார் எங்கெல்லாம் Use பன்னிருக்கிங்க தெரியுமா ? Online ல Check பண்ணலாம்
ADHAAR AUTHENTHICATION HISTORY : NEW OPTION
அனைவருக்கும் வணக்கம் !!!
இந்த பதிவின் மூலமாக உங்களது ஆதார் அட்டையை யாரெல்லாம் பயன்படுத்தியுள்ளனர் என தெரிந்துகொள்ளலாம்.
தற்பொழுது இருக்கும் காலகட்டத்தில் ஆதார் எண் என்பது அனைவருக்கும் முக்கிமான தேவைப்படும் ஆவணமாக உள்ளது.
உங்களுக்கே தெரியாமல் கூட உங்களின் ஆதார் எண்ணை தவறாக பயன்படுத்துவதற்கும் வாய்ப்புகள் உண்டு.
இதனை தெரிந்துகொள்ள ஆதார் தரப்பில் புதிய வசதி கொண்டுவரப்பட்டுள்ளது.
உங்கள் ஆதாரை இதுவரை எங்கெல்லாம் பயன்படுத்தியுள்ளீர் என தெரிந்து கொள்ளலாம்.
Adhaar Official Website:
ஆதார் கார்டு தொடர்பான அனைத்து Online சேவைகளையும் UIDAI எனும் அதிகாரபூர்வ இணையதளத்தில் பெறலாம்.
உங்களின் ஆதார் விபரங்களை சரிபார்க்க தனித்தனியே வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
தேவைப்படும் ஆவணங்கள்:
உங்களின் 12 இலக்க ஆதார் எண்
ஆதாரில் இணைக்கப்பட்டுள்ள தொலைபேசி எண்
ஆதார் பயன்பாட்டை தெரிந்துகொள்வது எப்படி?
Step 1: Go to Uidai.gov.in
Step 2: My Adhaar எனும் Link -ஐ Open செய்யவும்.
Step 3: Adhaar Authentication History எனும் Link -ஐ open செய்யவும்.
உங்களின் 12 இலக்க ஆதார் எண்ணை சரியாக உள்ளீடு செய்யவும்.
ரகசிய குறியீடு எண்ணை சரியாக TYPE செய்யவும்
SEND OTP எனும் Option -ஐ Click செய்யவும்.
உங்கள் தொலைபேசி எண்ணிருக்கு வந்துள்ள OTP -ஐ சரியாக Note செய்துகொள்ளவும்.
ஆதார் பயன்பாட்டை தெரிந்துகொள்வதற்காக Starting Date மற்றும் Ending Date சரியாக Select செய்யவும்.
கீழே உள்ள Verify OTP எனும் Option -ஐ கிளிக் செய்யவும்.
உங்களின் விபரங்கள் சரியாக இருந்தால் உங்களுக்கு Success என்று Notification கிடைக்கும்.
கீழே உள்ள Download எனும் Button -ஐ Click செய்யவும்.
உங்களின் பதிவுகளில் Open செய்வதற்கான கடவுச்சொல் (உங்கள் பெயரின் முதல் 4 எழுத்து மற்றும் பிறந்த வருடம்)
Ex: RAJU1993
ஆதார் விபரங்கள்:
உங்களின் ஆதார் எங்கெல்லாம் பயன்படுத்தப்பட்டுள்ளது என முழு விபரங்களும் தேதி மற்றும் நாள் வாரியாக கிடைக்கும்.
உங்களுக்கே தெரியாமல் ஏதேனும் விபரங்கள் இருந்தால் உடனடியாக ஆதார் உதவிமையத்தில் புகார் தெரிவிக்கலாம்.
No comments: