Tamil Nadu School Reopen - Jan 18 Important Instructions to Schools | அனைத்து ஆசிரியர்களும் ஆசிரியர்களும் கண்டிப்பாக பள்ளியில் இருக்க வேண்டும்
தமிழ்நாட்டில் வரும் 19ஆம் தேதி 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்படும் நிலையில் ஜனவரி 18ஆம் தேதி அனைத்து ஆசிரியர்களும் பள்ளிகளில் கட்டாயம் இருக்க வேண்டும் என கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
அனைத்து பள்ளிகளிலும் கல்வித்துறை அதிகாரிகள் குழு 18ஆம் தேதி ஆய்வு செய்வதால் அனைத்து ஆசிரியர்களும் காலை 9.30 மணிக்குள் பள்ளியில் இருக்க வேண்டும்.
Corono காரணமாக மூடப்பட்ட பள்ளிகளில் 10 மற்றும் 12th வகுப்புகள் எப்பொழுது திறக்கலாம் என்பதற்கான கருத்து கேட்பு கூட்டம் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் இடம் கேட்கப்பட்டது.
இவற்றில் பெரும்பாலான பள்ளிகளை திறக்க விருப்பம் தெரிவித்துள்ளனர் அதனடிப்படையில் ஜனவரி 18 மற்றும் 19 பள்ளிகள் திறக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து பள்ளிகளில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளையும் கல்வித்துறை வழங்கியுள்ளது.
மாணவர்கள் கண்டிப்பாக கவசம் அணிதல் வேண்டும்.
கிருமிநாசினி பயன்படுத்துதல் வேண்டும் குடிநீர் மற்றும் உணவு வீட்டில் இருந்து கொண்டு வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது
மேலும் கை குலுக்குதல், தொட்டு பேசுதல் போன்றவற்றிற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளதுபேசுதல் போன்ற வற்றிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு வகுப்பிலும் 25 பேர் வீதம் குழுவாக பிரித்து பாடம் நடத்துதல் வேண்டும் ஆய்வகத்தில் கூட்டத்தை தவிர்க்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
19ஆம் தேதி பள்ளிகளைத் இருப்பதால் அதற்கான முன்னேற்பாடுகளை சரியாக கவனித்துக் கொள்வதற்காக அனைத்து ஆசிரியர்களும் கண்டிப்பாக 18ஆம் தேதி பள்ளிகள் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு புதிய பாடத்திட்டம் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளிகள் திறப்பு முன்னேற்பாடுகளை கவனித்துக் கொள்வதற்காகவும், மாணவ மாணவர்களுக்கு உடல் நலமின்மை கண்டறியப்பட்டால் உடனடியாக அரசு மருத்துவமனைகளுக்கு ஆசிரியர்கள் அழைத்துச் செல்வதற்காகவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
எந்தவொரு மாணவருக்கும் வருகைப் பதிவு கட்டாயம் இல்லை
பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு 16:15 பள்ளிகள் முடியும் நேரம்.
12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மாலை 4:30 மணிக்கு பள்ளிகள் முடியும்.
அனைத்து ஆசிரியர்களும் முதல் இரண்டு நாட்களுக்கு கவுன்சிலிங் மட்டுமே வழங்க வேண்டும் எனவும் தெரியப்படுத்தப்பட்டுள்ளது.
Reviewed by eGovernance Helpdesk
on
January 17, 2021
Rating:


No comments: