10, 12 வகுப்பு பாடங்கள் 40% குறைப்பு | தமிழக அரசு அறிவிப்பு | Curriculam Reduction for TN Schools
10 மற்றும் 12ஆம் வகுப்புக்கான பாடத்திட்டத்தில் 40 சதவீதம் குறைக்கப்பட்டு உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழகத்தில் Corona காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் அனைத்து பள்ளிகளும் மூடப்பட்டு இருந்தன.
பெற்றோர்களிடம் கருத்துகேட்பு கூட்டம் நடத்தப்பட்டது..
இதனடிப்படையில் பெரும்பாலானோர் பள்ளிகளை திறக்க ஒப்புதல் வழங்கியுள்ளனர்.
ஜனவரி 18 மற்றும் 19 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் நிலையில் 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான பாடத்திட்டங்களை குறைப்பதை பற்றி நிறைய ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.
அனைத்து பாடங்களையும் முழு அளவில் நடத்த முடியாத சூழ்நிலை உள்ளதால் தற்போது 40 சதவீதம் வரை பாடங்களை குறைப்பதற்காக திட்டமிடப்பட்டுள்ளது.
மாவட்ட கல்வி அலுவலர்கள் மூலம் இந்த குறைக்கப்பட்ட பாடத்திட்டம் பற்றிய முழு அறிவிப்புகளும் அனைத்து பள்ளிகளுக்கும் வழங்கப்பட உள்ளன.
அனைத்து பள்ளிகளும் திறந்தவுடன் மாணவிகளுக்கும் இந்தப் பாடத்திட்டம் குறைப்பு பற்றிய விவரங்கள் தெரியப்படுத்தப்பட உள்ளன.
மேலும் முதல் இரண்டு நாட்களுக்கு மாணவர்களுக்கு கவுன்சிலிங் மட்டுமே வழங்கப்படும் என தெரியப்படுத்தப்பட்டுள்ளது.
40% வரை அனைத்து பாடங்களும் குறைக்கப்பட்டு உள்ளதாகவும் இந்த கல்வி ஆண்டில் மீதமிருக்கும் நாட்களில் மாணவர்களுக்கு இந்த பாடங்கள் மட்டும் நடத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Yes
ReplyDelete