Download New Color Voter ID Online - Application Form, Eligibility, Service Charges | புதிய வாக்காளர் அடையாள அட்டை பெறுவது எப்படி ?
அனைவருக்கும் வணக்கம் !!!
இந்த பதிவின் மூலமாக புதிதாக வாக்காளர் அடையாள அட்டை விண்ணப்பித்தவர்கள் எப்படி வாக்காளர் அட்டை பெறுவது என தெரிந்துகொள்ளல்லாம்.
வாக்காளர் அடையாள அட்டை:
தமிழகத்தில் இந்த வருடம் தேர்தல் வரும் நிலையில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் , முகவரி மாற்றம் , போட்டோ மாற்றம் செய்வதற்கு சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன.
மக்களே நேரடியாக Online மூலமாக விண்ணப்பிக்கும் வசதியும் இருக்கின்றன.
விண்ணப்பித்த அனைவருக்கும் அலுவலர்களின் பரிசீலனைக்கு பின்னர் குறுஞ்செய்தி வாயிலாக தெரிந்துகொள்ளலாம்.
புதிய கலர் வாக்காளர் அடையாள அட்டை அறிமுகம்:
ஏற்கனவே உள்ள வாக்காளர் அடையாள அட்டை லேமினேட் செய்யப்பட்டு வழங்கப்பட்டிருக்கும். தற்பொழுது இந்த அட்டை கலர் புகைப்படத்துடன் Plastic கார்டாக பெற்றுக்கொள்ளலாம்.
இந்த அட்டையை பெறுவதற்கு Online / அலுவலகம் மூலமாக விண்ணப்பிக்கலாம். 5 முதல் 20 நிமிடங்களில் பெற்றுக்கொள்ளலாம்.
எங்கு சென்று விண்ணப்பிப்பது ?
ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள வட்டாச்சியர் அலுவலகங்களுக்கு சென்று பொது சேவை மையத்தில் பெற்றுக்கொள்ளலாம்.
வாக்காளர் அடையாள அட்டை பெறுவதற்காக சிறப்பு படிவம் உள்ளது. இதனை சரியாக பூர்த்தி செய்து தேர்தல் வட்டாட்சியரிடம் கையப்பம் பெறவேண்டும்.
விண்ணப்பம் Download செய்ய வேண்டுமா ? Click Here
அந்த படிவத்தினை பொது சேவை மையத்தில் கொடுத்து உங்களின் புதிய வாக்காளர் அடையாள அட்டையை பெற்றுக்கொள்ளலாம்.
விண்ணப்ப கட்டணம் எவ்வளவு ?
25 ரூபாய் மட்டுமே
வேறு எந்த Option மூலமாக விண்ணப்பித்தாலும் உங்களுக்கு Voter ID எளிதில் கிடைக்காது.
15 முதல் 20 நிமிடத்திற்குள் நீங்கள் அங்கு சென்று வாங்கிக்கொள்ளலாம்.
இறுதி வாக்காளர் பட்டியல்:
தேர்தல் ஆணையம் இறுதி வாக்காளர் பட்டியலை ஜனவரி 10 முதல் 20 ஆம் தேதிக்குள் வெளியிட திட்டமிட்டுள்ளது.
அதற்கு பிறகு நீங்கள் வாக்காளர் அட்டை தொடர்பாக எந்த மாற்றமும் செய்யமுடியாது.
விண்ணப்ப படிவம் பூர்த்தி செய்வது எப்படி?
தமிழ்நாடு தேர்தல் ஆணையத்தின் இணையதளத்திற்கு செல்லவும். https://www.elections.tn.gov.in/
Electoral Role Services எனும் link ஐ Click செய்யவும்.
Download Application Form எனும் இணைப்பில் Form 001 -ஐ Click செய்யவும்.
உங்களின் வாக்காளர் அடையாள அட்டை சம்பந்தப்பட்ட அனைத்து விபரங்களையும் பூர்த்தி செய்து வட்டாச்சியர் அலுவலக eSevai மையத்தில் கொடுக்கவும்.
விண்ணப்ப கட்டணம் 25ரூபாய் செலுத்தி வாக்களர் அடையாள அட்டை பெறலாம்.
வாக்காளர் அடையாள அட்டை தொடர்பான சேவைகள் பற்றி தெரிந்துகொள்ள வேண்டுமா ? Click Here
No comments: