Final Voter List Ready for TN Elections 2021 | இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு | Download New Smart Voter ID Card Online
கலைக்கட்டும் தமிழக சட்டமன்ற தேர்தல் 2021
இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு மக்கள் மகிழ்ச்சி !!!
இந்த வருடம் தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெறும் நிலையில் வாக்காளர் அட்டை சரிபார்ப்பு , பெயர் சேர்த்தல், திருத்தம் செய்தல், பெயர் நீக்கம் போன்ற அனைத்து சேவைகளும் விண்ணப்பிக்கப்பட்டன.
பொதுமக்கள் தாமாகவே ஆன்லைன் மூலமாக விண்ணப்பித்துக்கொள்ளும் வசதி மற்றும் சிறப்பு வாக்காளர் முகாம்கள் மூலமாக இந்த பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்த பணிகளை விரைவாக முடித்திட தேர்தல் ஆணையம் பல்வேறு ஏற்பாடுகளை செய்துள்ளது.
எப்பொழுதும் இல்லாத அளவிற்கு கரோனா காலம் என்பதால் கூடுதலாக 35ஆயிரம் வாக்குச்சாவடி மையங்கள் திட்டமிடப்பட்டுள்ளது. மொத்தமாக 95 ஆயிரம் வாக்குச்சாவடி மையங்களில் தேர்தல் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த வருடம் நவம்பர் முதல் தமிழ்நாட்டில் வாக்காளர் அட்டை தொடர்பாக 30,68,000 மனுக்கள் பெறப்பட்டன.
20 லட்சத்திற்கு மேல் மனுக்கள் புதிய பெயர் சேர்ப்பதற்காக விண்ணப்பிக்கப்பட்டுள்ளன.
இந்த மனுக்களை தேர்தல் ஆணையம் பரிசீலித்து வருகிறது. தமிழகத்தின் இறுதி வாக்காளர் பட்டியல் ஜனவரி 20ஆம் தேதி வெளியிடப்படவுள்ளது.
புதிதாக விண்ணப்பித்த அனைவரும் Online மூலமாக உங்கள் பெயர்களை சரிபார்த்துக்கொள்ளலாம்.
மேலும் அனைவருக்கும் புதிய வாக்காளர் அடையாள அட்டை ஜனவரி 25ஆம் தேதி தேசிய வாக்காளர் தினத்தில் கொடுப்பதற்காகவும் திட்டமிடப்பட்டுள்ளது.
வாக்காளர் அடையாள அட்டை பெறுவது எப்படி?
வாக்காளர் அடையாள அட்டை தற்பொழுது வண்ண புகைப்படத்துடன் கூடிய பிளாஸ்டிக் அட்டையாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த அட்டையை ஒவ்வொரு கிராமத்திற்கும் ஒதுக்கப்பட்டுள்ள BLO மூலமாக பெற்றுக்கொள்ளலாம்
ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள வட்டாச்சியர் அலுவலகத்தில் உள்ள அரசு கேபிள் டிவி பொது சேவை மையங்களிலும் பெற்றுக்கொள்ளலாம்.
பொது சேவை மையத்தில் கட்டணம் 25 ரூபாய் மட்டுமே..
மேலும் வாக்காளர் அடையாள அட்டை சம்பந்தமாக அனைத்து சேவைகளுக்கும் இங்கு Click செய்யவும்.
No comments: