மாஸ் காட்டும் முதல்வர் !! தைப்பூசத்திற்கு இனி அரசு விடுமுறை !!! ஜனவரி 28 இனிமேல் எல்லாருக்கும் லீவு
அனைவருக்கும் வணக்கம் !!!
தமிழ்நாடு அரசு புதிய அரசாணை வெளியீடு மக்கள் மகிழ்ச்சி !!!
தமிழ்நாட்டில் புதிதாக அரசு விடுமுறை இன்று முதல் அறிமுகமாகிறது. தைப்பூசத்திற்கு இனிமேல் அரசு விடுமுறை எனும் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
தமிழக முதல்வர் திரு, எடப்பாடி பழனிசாமி அவர்கள் இந்த விடுமுறைக்கான அரசாணையை வெளியிட்டுள்ளார்.
தமிழ் கடவுளாகிய முருகப்பெருமானை சிறப்பித்து கொண்டாடப்படும் திருவிழாக்களில் முக்கிய நிகழ்ச்சி தைப்பூசமாகும்.
இந்த விழா தமிழ்நாடு மட்டும் இன்றி கேரளா, கர்நாடக போன்ற மாநிலங்களிலும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இலங்கை சிங்கப்பூர் , மலேசியா, மொரிசியஸ் மற்றும் இந்தோனேசியா போன்ற நாடுகளிலும் முக்கிய நிகழ்ச்சியாக கொண்டாடப்படுகிறது.
அரசாணை வெளியீடு :
பல்வேறு மாநிலங்களில் மற்றும் நாடுகளில் இந்த விழா பொதுவிடுமறையாக உள்ளது.
மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டதில் மக்களின் வேண்டுகோளை கருத்தில்கொண்டு இந்த பொதுவிடுமுறை முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
வரும் ஜனவரி மாதம் 28ஆம் நாள் கொண்டாடப்படும் தைப்பூச திருவிழாவை பொதுவிடுமுறை நாளாக அறிவித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
மேலும் இந்த வருடம் மட்டுமல்லாமல் இனி வரும் அனைத்து வருடங்களிலும் இந்த விடுமுறை அரசு விடுமுறை பட்டியலில் இணைக்கப்படும்.
இந்த செய்தி குறிப்பினை தமிழக செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறை 05.01.2021 அன்று வெளியிட்டுள்ளது.
அரசாணையை Download செய்ய இங்கு Click செய்யவும்
Reviewed by eGovernance Helpdesk
on
January 05, 2021
Rating:



No comments: