Ration Shop Job Interview Call Letter - Documents Required, Question and Answers, District wise

 தமிழக ரேஷன் கடைகளில் வேலைவாய்ப்பு 2020:


தமிழ்நாடு முழுவதும் உள்ள நியாய விலை கடைகளில் காலியாக உள்ள  விற்பனையாளர் மற்றும் கட்டுநர் பணியிடங்களை நிரப்புவதற்காக வேலைவாய்ப்பை அறிவித்திருந்தது.




ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையம் மூலமாக விண்ணப்பங்கள்  Online -ல் பெறப்பட்டன. விருப்பமும் தகுதியும் உள்ள அனைவரும் விண்ணப்பித்திருந்தனர்.



ஒவ்வொரு மாவட்டம் வாரியாக தற்போது இந்த பணிகளுக்கான நேர்முகத்தேர்வு Call Letter தகுதியுள்ள அனைவர்க்கும் தற்பொழுது அனுப்பப்பட்டுள்ளது. 


காலிப்பணியிடங்கள் விபரம்:


இரண்டு விதமான பணிகளுக்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டன.


விற்பனையாளர் 

கட்டுனர் 


வயது வரம்பு:


18 வயது முதல் 35 வயதிற்குள் உள்ளவர்கள் 


வயது வரம்பில் OBC , MBC , ST , ST , ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ஜாதி வாரியாக சலுகைகள் உண்டு)


முன்னுரிமை விபரங்கள்:


ஆதரவற்ற விதவைகள், கணவரால் கைவிடப்பட்டவர்கள், முன்னாள் ராணுவத்தினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள்.


நேர்முக தேர்வு எப்பொழுது?


மாவட்டம் வாரியாக தற்பொழுது Call Letter அனுப்பப்படுகின்றன.  விண்ணப்பத்தில் குறிப்பிட்டிருத்த முகவரிக்கு Speed Post மூலமாக வருகிறது.


ஜனவரி முதல் வாரத்திற்குள் அனைத்து மாவட்டங்களிலும் இந்த நேர்முக தேர்வு நடைபெற்றுவிடும்.


நேர்முக தேர்வுக்கு தேவையான ஆவணங்கள்:


நீங்கள் விண்ணப்பத்தில் குறிப்பிட்ருந்த அணைத்து ஆவணங்களையும் கொண்டுசெல்ல வேண்டும். Original மற்றும் Xerox ஒரு Copy.



இருப்பிட சான்றிதழ் 

வயது வரம்பு சான்றிதழ் 

வருமான சான்றிதழ் 

PSTM Certificate (தமிழ் மொழியில் பயின்றதற்கான சான்றிதழ்)

10,12 வகுப்பு Marksheet , TC 

வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்த எண் 


கேட்கப்படும் கேள்விகள் என்ன?


உங்கள் மாவட்டத்தில் உள்ள நியாய விலை கடைகளில் என்ன சேவைகள் வழங்கப்படுகின்றன ?


மாவட்டத்தின் தலைமை அலுவலர் யார் ?


ஸ்மார்ட் கார்டு பற்றிய கேள்விகள் ?


ரேஷன் அட்டை வகைகள் என்ன?


நீங்கள் விண்ணப்பித்த பணிகள் பற்றிய கேள்விகள் ?


முன் அனுபவம் மற்றும் ரேஷன் கடை பற்றிய உங்களின் கருத்து என்ன ?


முன்னுரிமை பட்டியலில் விண்ணப்பத்திருந்தால் அதை பற்றிய கேள்விகள்


மேலும் நீங்கள் பதில் சொல்வதை பொறுத்து மற்ற கேள்விகள் கேட்கப்படுகின்றன.



எங்கு Interview நடக்கும்?


ஒவ்வொரு மாவட்டத்திலும் 3 குழுக்களாக நேர்முக தேர்வு நடைபெறும். உங்களுக்கு கடிதத்தில் குறிப்பிட்டிருக்கும் அரசு அலுவலகத்தில் நடைபெறும்.

Ration Shop Job Interview Call Letter - Documents Required, Question and Answers, District wise Ration Shop Job Interview Call Letter - Documents Required, Question and Answers, District wise Reviewed by eGovernance Helpdesk on December 18, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.