Amma Two Wheeler Scheme - Eligibility, Benifits, Apply Procedure | அம்மா இருசக்கர வாகன திட்டம்
இந்த பதிவின் மூலமாக அம்மா இருசக்கர வாகன திட்டம் பற்றிய முழு விபரங்களும் தெரிந்துகொள்ளலாம்.
அம்மா இருசக்கர வாகன திட்டம்
தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்துப் பெண்களும் பயன்பெறும் வகையில் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
உழைக்கும் பெண்களின் திறனை மேம்படுத்துவதற்கு அரசு சார்பில் மானிய விலையில் இருசக்கர வாகனம் கொடுக்கப்படுகிறது.
வேலைக்கு செல்லும் பெண்களில் பயணத்தை எளிதாக்கும் வகையில் இந்த இரு சக்கர வாகன திட்டத்தில் அல்லது ஆட்டோ கியர் வாகனங்கள் மட்டுமே நீங்கள் வாங்க முடியும்.
திட்டத்தின் சிறப்பம்சங்கள்:
இந்த திட்டமானது 2018 ஆம் வருடம் பிப்ரவரி மாதத்தில் தொடங்கப்பட்டது.
இந்தத் திட்டத்தில் மானிய விலையில் ஸ்கூட்டர் நீங்கள் வாங்கிக் கொள்ள முடியும் குறைந்தபட்சம் 25 ஆயிரம் ரூபாய் அல்லது ஸ்கூட்டரில் விலையில் 50 சதவிகிதம் மானியமாக பெற முடியும்.
ஸ்கூட்டர் வாங்க தேவையான மீதப் பணத்தை நீங்கள் வங்கி கடன் மூலமாகவோ அல்லது உங்களின் சொந்த பணத்தில் மூலமாகவோ செலுத்தலாம்.
விருப்பம் உள்ள பெண்கள் இந்தத் திட்டத்தில் விண்ணப்பிப்பதற்கு விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து சம்பந்தப்பட்ட அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
திட்டத்தின் சிறப்பம்சங்கள்
- இதுவரையிலும் ஒரு லட்சம் பெண்கள் பயனடைந்துள்ளனர்
- ஸ்கூட்டரின் விலையில் 50 சதவீத மானியம் அல்லது 25 ஆயிரம் ரூபாய் தொகை இதில் ஏதோ ஒன்றை நீங்கள் பெற்றுக்கொள்ளலாம்
- அனைத்து கிராம மற்றும் நகர்ப்புற பெண்கள் அனைவரும் பயன் பெறலாம்
- இந்தத் திட்டத்தின் மானிய பணம் உங்கள் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படும்.
விண்ணப்பிக்க தேவையான தகுதிகள்
- 18 முதல் 40 வயது வரை விண்ணப்பிக்கலாம்
- குடும்ப ஆண்டு வருமானம் வருடத்திற்கு 2 லட்சத்து ஐம்பதாயிரம் விட குறைவாக இருக்க வேண்டும்
- குறைந்தபட்சம் எட்டாம் வகுப்பு படித்திருக்க வேண்டும்
- ஓட்டுனர் உரிமம் கண்டிப்பாக வைத்திருக்க வேண்டும்
விண்ணப்ப படிவம் பூர்த்தி செய்வது எப்படி ?
விண்ணப்பிக்க தேவைப்படும் ஆவணங்கள்:
- வயது சான்றிதழ்
- இருப்பிட சான்றிதழ்
- ஓட்டுநர் உரிமம்
- வருமான சான்றிதழ்
- வேலை செய்வதற்கான சான்றிதழ்
- ஆதார் கார்டு
- கல்வி தகுதி சான்றிதழ்
- ஜாதி சான்றிதழ்
- வாகனம் வாங்குவதற்கான Qutation.
E bike வாங்களாமா
ReplyDeleteSuper videooo9oooo
ReplyDelete