Tamil Nadu Free Sewing Machine Scheme - Apply Procedure, Eligibility Criteria, Benifits, Required Documents | தமிழ்நாடு அரசின் இலவச தையல் இயந்திரம் பெறுவது எப்படி?

அனைவருக்கும் வணக்கம் !!!


இந்த பதிவின் மூலமாக தமிழக அரசு மூலமாக வழங்கப்படும் இலவச தையல் இயந்திரம் பெறுவது எப்படி என்று தெரிந்துகொள்ளலாம்.




பெண்கள் அனைவரும் பயன்பெறும் வகையில் இலவச தையல் இயந்திரம் வழங்கப்படுகிறது. இதன் மூலம் பெண்கள் அவர்களின் வாழ்வாதாரத்தை பெருக்கிக்கொள்ள முடியும். 


இந்த திட்டம் தமிழக அரசின் சமூக நலத்துறை மூலமாக வழங்கப்படுகிறது. வறுமைக்கோட்டிற்குகீழ் உள்ள குடும்பங்களுக்கு இந்த திட்டம் மூலமாக பயன்கள் கிடைக்கும்.


இந்த திட்டம் சத்யவானி அம்மையார் அவர்களின் நினைவாக செயல்படுத்தப்படுகிறது. சத்யவானி அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டம்.


யாரெல்லாம் பயன்பெறலாம்?

கணவரால் கைவிடப்பட்ட பெண்கள், விதவைகள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் பொருளாதாரத்தில் பின் தங்கிய குடும்ப பெண்கள், வறுமைக்கோட்டிற்குக்கீழ் உள்ள பெண்கள்.


20 முதல் 40 வயது வரை உள்ள பெண்கள் விண்ணப்பிக்கலாம்.


குடும்ப ஆண்டு வருமானம் 72,000 ரூபாய் விட குறைவாக இருக்கவேண்டும்.


தையல் தெரிந்த பெண்கள் விண்ணப்பிக்கலாம்.


விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள்:


  • புகைப்படம்
  • இருப்பிட சான்றிதழ் 
  • வருமான சான்றிதழ் 
  • வயது வரம்பு சான்றிதழ் 
  • ஆதார் அட்டை 
  • தையல் கற்றுக்கொண்டதற்கான சான்றிதழ் 
  • தொலைபேசி எண் 
  • விதவை சான்றிதழ் / கணவரால் கைவிடப்பட்டவர் சான்றிதழ் (தேவைப்பட்டால் மட்டும்)


விண்ணப்பிப்பது எப்படி?


இலவச தையல் இயந்திரம் பெறுவதற்கு விண்ணப்பபடிவம் உள்ளது. அதனை சரியாக பூர்த்தி செய்து சமபந்தப்பட்ட அலுவலகத்தில் சமர்ப்பிக்கவேண்டும். 


ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இந்த படிவத்தை சரியாக பூர்த்தி செய்து அனைத்து ஆவணங்களையும் சமர்ப்பிக்கவேண்டும்.


தனி தனியாக இலவச தையல் இயந்திரம் பெறுவதற்கு மாவட்டம் வாரியாக பத்திரிக்கை செய்திகளில் அழைப்பு விடுப்பார்கள். இந்த திட்டத்திற்கான நிதி மாவட்டம் வாரியாக ஒதுக்கப்பட்டதும் மாவட்டங்களில் விண்ணப்பம் பெறப்படும்.


திட்டத்தின் பயன்கள்:


ஒரு குடும்பத்தின் ஆண்டு வருமானம் குறைவாக இருந்தால் கூடுதலாக சம்பாதிக்க வழிவகை செய்கிறது.


பெண்கள் அனைவரும் எளிதாக வீட்டிலிருந்தே சம்பாதிக்கமுடியும்.


பெண்கள் சுயதொழில் செய்வதற்கு வழிவகை செய்கிறது. 


விண்ணப்ப படிவம் பூர்த்தி செய்வது எப்படி?


இலவச தையல் இயந்திரம் பெறுவதற்கான விண்ணப்பபடிவத்தை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.


https://cms.tn.gov.in/sites/default/files/forms/social_welfare_form8.pdf


விண்ணப்பத்தில் கேட்கப்பட்டுள்ள அனைத்து வியாபாரங்களையும் சரியாக பூர்த்தி செய்ய வேண்டும்.


தேவையான அனைத்து ஆவணங்களையும் இணைக்கவேண்டும்.


விண்ணப்பத்தை உங்கள் மாவட்டத்தில் உள்ள சமூக நலத்துறை அலுவலகத்தில் சமர்ப்பிக்கவேண்டும்.


விண்ணப்பங்கள் பெறப்பட்டதும் அதற்கான ஒப்புகை எண் வழங்கப்படும். மாவட்டத்தில் சிறப்பு விழாக்களின் மூலமாக தகுதியுள்ள அனைவருக்கும் தையல் இயந்திரம் கிடைக்கும்.


விருப்பம் உள்ள அனைவரும் இந்த இலவச தையல் இயந்திரம் பெற விண்ணப்பிக்கலாம்.

Tamil Nadu Free Sewing Machine Scheme - Apply Procedure, Eligibility Criteria, Benifits, Required Documents | தமிழ்நாடு அரசின் இலவச தையல் இயந்திரம் பெறுவது எப்படி? Tamil Nadu Free Sewing Machine Scheme - Apply Procedure, Eligibility Criteria, Benifits, Required Documents | தமிழ்நாடு அரசின் இலவச தையல் இயந்திரம் பெறுவது எப்படி? Reviewed by eGovernance Helpdesk on November 20, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.