Voter Draft List Published for TN Elections 2021- New Voter Inclusion, Exclusion, Address Change, Apply Online
2021 ஆம் ஆண்டிற்கான வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு
2021 ஆம் ஆண்டு தேர்தல் நடைபெற உள்ள நிலையில் வாக்காளர் பட்டியல் தற்பொழுது வெளியிடப்பட்டுள்ளது. மேலும் இந்த பட்டியலில் உள்ள விபரங்கள் சரியாக உள்ளதா என சரிபார்த்துக்கொள்ள நல்ல வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
பட்டியலில் உள்ள விபரங்களில் ஏதேனும் மாற்றங்கள் தேவைப்பட்டால் அதனை டிசம்பர் 15 ஆம் தேதிக்குள் மாற்றிக்கொள்ளலாம்.
வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்கவும், பெயர் நீக்கவும், மாற்றம் செய்யவும் சிறப்பு முகாம்கள் இந்த மாதம் நடைபெறவுள்ளன.
முகாம்கள் நடைபெறும் நாட்கள்:
நவம்பர் 21
நவம்பர் 22
டிசம்பர் 12
டிசம்பர் 13
சரியான முகவரி மற்றும் புகைப்பட ஆவணங்களை சமர்ப்பித்து மாற்றங்கள் செய்துகொள்ளலாம்.
உங்களில் விண்ணப்பங்கள் முகாம்களில் சமர்பிக்கப்பட்டால் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மூலமாக பரிசீலனை செய்யப்படும்.
எப்படி பரிசீலனை செய்வார்கள்:
ஒவ்வொரு கிராமத்திற்கும் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது. முகாம்களுக்கு பூத் லெவல் அலுவலர்கள் மூலமாக மூலமாக விண்ணப்பங்கள் சம்பந்தப்பட்ட வட்டாச்சியர் அலுவலகத்தில் உள்ள தேர்தல் அலுவலருக்கு அனுப்பி வைக்கப்படும்.
இறுதி வாக்காளர் பட்டியல் எப்போது ?
அனைத்து விண்ணப்பங்களும் சரியாக பரிசீலனை செய்யப்பட்டு இறுதி வாக்காளர் பட்டியல் ஜனவரி 5ஆம் தேதி வெளியிடப்படும்.
பதிவு செய்ய தேவைப்படும் ஆவணங்கள்:
வயது சான்றிதழ்:
பிறப்பு சான்றிதழ்
பள்ளி மாற்றுச்சான்றிதழ்
மதிப்பெண் சான்றிதழ்
முகவரி சான்றிதழ்:
ஆதார் அட்டை
ஸ்மார்ட் கார்டு
ஓட்டுநர் உரிமம்
பாஸ்போர்ட்
இவற்றில் ஏதேனும் ஒரு ஆவணங்கள் இருந்தால் போதும்.
வாக்காளர் பதிவிற்கு தேவைப்படும் முக்கியமான படிவங்கள்:
புதிய பெயர் சேர்க்க - படிவம் 6
வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்க - படிவம் 7
பதிவுகளை திருத்தம் செய்ய - படிவம் 8
முகவரி மாற்றம் செய்ய- படிவம் 8A
இந்த அனைத்து விபரங்களையும் நீங்கள் எளிதாக ஆன்லைன் மூலமாகவும் மாற்றம் செய்துகொள்ளலாம்.
வாக்காளர் பட்டியலில் உள்ள விபரங்களை தெரிந்துகொள்ள https://eci.gov.in
திருத்தம் செய்வதற்கு https://nvsp.in
இந்த அறிய வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளுங்கள். இந்த தகவல்களை முடிந்தவரை அனைவருக்கும் பகிரவும்.
No comments: