How to Change Name in Birth Cetificate - Step by Step Procedure | பிறப்பு சான்றிதழில் பெயர் மாற்றம் அல்லது திருத்தம் செய்வது எப்படி ?
வணக்கம் நண்பர்களே !!
இந்த பதிவின் மூலமாக பிறப்பு சான்றிதழில் எப்படி பெயர் மற்றம் என்பது பற்றி தெரிந்துகொள்ளலாம் !!
பிறப்பு சான்றிதழில் பெயர் மாற்றம் அல்லது திருத்தம் செய்வது எப்படி ?
பிறப்பு சான்றிதழ் என்பது அனைவருக்கும் முக்கியமாக தேவைப்படும் அரசு ஆவணங்களில் ஒன்றாகும். பெயர் சரியாக உள்ளதா என ஆரம்பத்திலே சரிபார்த்துக்கொள்ளவேண்டும்.
ஏதோ ஒரு சில காரணங்களால் பெயரை மாற்றம் செய்தாலோ அல்லது திருத்தம் செய்தாலோ உடனடியாக பிறப்பு சான்றிதழிழும் மாற்றம் செய்திருக்கவேண்டும்.
பிறப்பு சான்றிதழ் யார் மூலமாக கிடைக்கும் ?
நகர்ப்புற பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு கார்பொரேஷன் அல்லது முனிசிபாலிடி அலுவலகங்கள் மூலமாக கிடைக்கும்.
கிராமப்புற மக்களுக்கு சம்பந்தப்பட்ட வட்டாச்சியர் அலுவலகங்கள் மூலமாக கிடைக்கும். ஓவொரு கிராமத்திற்கும் அங்கிருக்கும் கிராம நிர்வாக அலுவலர் மூலமாக சான்றிதழ் பெற்றுக்கொள்ளலாம்.
உங்கள் சான்றிதழில் ஏதேனும் திருத்தம் செய்யவிரும்பினால் இந்த வழிமுறைகைளை பின்பற்றி சுலபமாக பெற்றுக்கொள்ளலாம்.
எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?
முதலில் பிறப்பு சான்றிதழில் மாற்றம் செய்ய தேவையான Correction / Update படிவத்தை சம்பந்தப்பட்ட கார்பொரேஷன் / முனிசிபாலிடி அலுவலகத்தில் இருந்து பெற வேண்டும்.
உங்கள் பெயர் மாற்றம் செய்யப்பட்டதற்கான ஆவணமாக நோட்டரி அபிடேவிட் அல்லது கெஜெட் அலுவலர்களிடம் இருந்து கடிதம் பெற வேண்டும்.
விண்ணப்பத்தை சரியாக பூர்த்தி செய்து கார்பொரேஷன் அலுவலகத்தில் ஆவணங்களுடன் சமர்ப்பிக்கவேண்டும்.
உங்கள் பெயர் மாற்றம் அல்லது திருத்தம் செய்யப்பட்டதற்கான விபரங்களில் இரண்டு அல்லது மூன்று பத்திரிகைகளில் தெரியப்படுத்தவேண்டும்.
உங்கள் பெயரை கேசெட் -ல் மாற்றம் செய்வது எப்படி?
பத்திரிகைகளில் வெளியிடப்பட்ட அறிக்கை மற்றும் பெயர் மாற்றம் செய்யப்பட்டதற்கான விபரங்களுடன் கேசெட் அலுவலகத்தில் விண்ணப்பம் தரலாம்.
அந்த விண்ணப்பம் பரிசீலனை செய்யப்பட்டு பெயர் மாற்றம் செய்து தருவார்கள்.
பெயர் மாற்றம் யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
தமிழ்நாட்டில் வசிக்கும் அனைவரும் விண்ணப்பிக்கலாம்.
60 வயதிற்கு மேல் இருப்பவர்கள் மாற்றம் செய்ய விரும்பினால் மருத்துவரிடம் இருந்து வாழ்நாள் சான்றிதழ் பெற்று வர வேண்டும்.
தேவைப்படும் ஆவணங்கள்:
- ஏற்கனவே உள்ள பிறப்பு சான்றிதழ்
- பெயர் மாற்றம் செய்யப்பட்டதற்கான ஆவணங்கள்
- பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம்
- புகைப்படம்
- பெயர் மாற்றம் செய்ததற்காக அறிவிக்கப்பட்ட பத்திரிக்கை செய்தி நகல்
விண்ணப்ப கட்டணம் எவ்வளவு?
பெயர் மற்றம் செய்தவருக்கு விண்ணப்பத்துடன் சேர்த்து 415 ரூபாய் செலுத்தவேண்டும்.
தமிழில் பெயர் மாற்றம் செய்ய விரும்பினால் ரூபாய் 50 மற்றும் அஞ்சல் கட்டணம் செலுத்த வேண்டும்.
சான்றிதழ் எப்படி கிடைக்கும்?
விண்ணப்பம் பரிசீலனை செய்யப்பட்டதும் உங்களுக்கு தெரியப்படுத்துவார்கள். நேரில் சென்றும் வாங்கிக்கொள்ளலாம்.
இல்லையெனில் விண்ணப்பிக்கும் பொழுதே சமர்ப்பித்த முகவரிக்கு தபால் மூலமாக அனுப்பிவைப்பார்கள்.
Reviewed by eGovernance Helpdesk
on
November 11, 2020
Rating:


No comments: