Tamil Nadu DEO Recruitment - Data Entry Operator Govt Job Announcement, Eligibility, Age Limit, Qulaification | தமிழ்நாடு டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் வேலைவாய்ப்பு

அனைவருக்கும் வணக்கம் !!!


இந்த பதிவின் மூலமாக தமிழ்நாட்டில் புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள வேலைவாய்ப்பை பற்றி தெரிந்துகொள்ளலாம்.




தமிழ்நாடு அரசின் வேலை பெறுவதற்கு புதிய வாய்ப்பு வந்தாச்சு. தமிழ்நாடு அரசின் அனைத்து துறைகளிலும் டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் எனும் புதிய பதவியை அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் கணினியில் நன்றாக டைப்பிங் செய்பவர்களுக்கு மிகவும் எளிதில் வேலை கிடைக்கும்.


அரசு வெளியிட்டுள்ள தகவல்:


அனைத்து அரசு துறைகளிலும் தட்டச்சர்கள், சுருக்கெழுத்தர்கள் மற்றும் இளநிலை உதவியாளர்கள் என்று பணியிடங்கள் நிரப்பட்டுள்ளன. அரசு சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்கள் மற்றும் ஆவணங்கள் கணினி மையமாக்கப்பட்டுள்ளன.


கணினியின் பயன்பாடு அனைத்து துறைகளிலும் முக்கியாக தேவைப்படுகிறது. ஏற்கனவே குரூப் சி பணியிடங்களில் இந்த பணிகள் இருக்கின்றன.


வேலை என்ன?


அலுவலக ரீதியான தகவல்களை ஆவணப்படுத்துதல், கடிதங்கள் எழுதுதல், வரைவு தயாரித்தல், அரசு ஆன்லைன் சேவைகளை மேம்படுத்துதல் போன்ற அனைத்தும் தட்டச்சர்கள் செய்துவருகின்றனர் இவை அனைத்தும் கணினி மையமாக்கப்பட்டுள்ளது.


மத்திய அரசில் இந்த அனைத்து பணிகளுக்கும் டேட்டா என்ட்ரி ஆப்பரேட்டர் என்ற பெயரில் பதவிகள் வழங்கப்படுகிறது.


இதைப்போலவே தற்பொழுது தமிழக அரசும் இந்த பதிவியை புதிதாக அறிமுகம் செய்துள்ளது.


கல்வித்தகுதி:


குறைந்த பட்சம் 12 வகுப்பு படித்திருக்க வேண்டும்.


12 முதல் எந்த பட்டப்படிப்பு படித்திருந்தாலும் போதுமானது.


தட்டச்சில் தமிழில் தேர்ச்சி மற்றும் ஆங்கிலத்தில் ஹையர் கிரேடு 


அல்லது 


தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சில் தேர்ச்சி அல்லது ஹையர் கிரேடு 


முக்கியமான குறிப்பு:


தமிழ்நாடு தகவல் தொழில்நுட்ப கழகம் நடத்தும் அரசு கணினி தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும்.


மத்திய அரசு பணியில் டேட்டா என்ட்ரி ஆப்பரேட்டர் பதவிக்கு +12 கல்வித்தகுதியுடன் மணிக்கு 8000 ஸ்ட்ரோக் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.


தேர்வு செய்யும் முறை:


இந்த புது பதவிகளுக்கு TNPSC தேர்வாணையத்தின் மூலமாக தேர்வு செய்யப்படுவார்கள். ஒவ்வொரு தேர்வு அறிவிக்கும் பொழுதும் இந்த பணியிடங்கள் அனைத்து துறைகளிலும் நிரப்பப்பட உள்ளது.


அடுத்த TNPSC தேர்வு அறிவிப்பிலிருந்து குரூப் சி காலிப்பணியிடங்கள் வெளியிடப்படும். 


இந்த பதவிக்கு எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்றாலும் கணினி தட்டச்சு திறன் பரிசோதிக்கப்படும்.


இந்த ஒரு சிறப்பு பதவி இனி அனைத்து துறைகளிலும் கிடைக்கும். அரசு வேலை தேடுவோருக்கு கண்டிப்பாக இந்த பணி மகிழ்ச்சியான தகவலாக இருக்கும்.


TNPSC புதிய நடைமுறை:


தமிழ்நாடு அரசு தேர்வாணையம் புதியதாக ஒரு நடைமுறையை கொண்டுவந்துள்ளது.  தேர்வுக்கு விண்ணப்பிக்க அனைவர்க்கும் ஒருமுறை பதிவு எண் இருக்கவேண்டும். 


 தற்பொழுது இந்த OTR பதிவில் ஆதார் எண் கண்டிப்பாக இணைக்கப்படவேண்டும். ஏற்கனவே பதிவு எண் வைத்திருப்பவர்கள் கண்டிப்பாக இந்த இணைப்பை செய்திருக்க வேண்டும்.


ஆதார் எண்ணில் இணைக்கப்பட்டுள்ள தொலைபேசி எண்ணிற்கு ஒருமுறை கடவுச்சொல் வரும், அதனை சரியாக உள்ளீடு செய்து ஆதார் இணைக்கப்படவேண்டும்.


இதுவரை இந்த இணைப்பை செய்யாதவர்கள் கண்டிப்பாக செய்யவேண்டும்.மேலும் இந்த தகவலை முடிந்தவரை அனைத்து நண்பர்களுக்கும் பகிரவும்.


உங்கள் நண்பர்களும் பயன்பெறுவர். மேலும் அரசு வேலை தொடர்பாக ஏதேனும் சந்தேகம் இருந்தால் கமெண்ட் செய்யவும்.


நன்றி!! 


Tamil Nadu DEO Recruitment - Data Entry Operator Govt Job Announcement, Eligibility, Age Limit, Qulaification | தமிழ்நாடு டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் வேலைவாய்ப்பு Tamil Nadu DEO Recruitment - Data Entry Operator Govt Job Announcement, Eligibility, Age Limit, Qulaification | தமிழ்நாடு  டேட்டா என்ட்ரி ஆபரேட்டர்  வேலைவாய்ப்பு Reviewed by eGovernance Helpdesk on November 18, 2020 Rating: 5

1 comment:

Powered by Blogger.