How to Get Duplicate Certificates in TamilNadu | தொலைந்துபோன பள்ளி மற்றும் கல்லூரி சான்றிதழ்களை திரும்ப பெறுவது எப்படி
அனைவருக்கும் வணக்கம் !!!
இந்த பதிவின் மூலமாக தொலைந்துபோன பள்ளி மற்றும் கல்லூரி சான்றிதழ்களை திரும்ப பெறுவது எப்படி என்று தெரிந்துகொள்ளலாம்.
நம் அனைவருக்கும் முக்கியமாக தேவைப்படுவது பள்ளி, கல்லூரி மதிப்பெண் சான்றிதழ்கள் தான். நம் கவனக்குறைவால் இந்த சான்றிதழ்களை நாம் எதோ ஒரு இடங்களில் தொலைந்துவிட்டால் அடுத்து என்ன செய்யவேண்டும் என்று தெரியாமல் போய்விடும்.
சான்றிதழ்கள் பேருந்துகளில் தொலைத்துவிட்டாலோ, ஏதேனும் ஒரு Xerox கடைகளில் தவறுதலாக வைத்துவிட்டு மறந்துவிட்டாலோ இனிமேல் நீங்கள் கவலைப்பட தேவையில்லை.
உங்கள் சான்றிதழ்கள் தொலைந்துவிட்டால் நீங்கள் என்ன என்ன செய்யவேண்டும் என்று தெளிவாக பார்க்கலாம்.
சான்றிதழ்கள் தொலைந்துவிட்டால் என்ன செய்யவேண்டும் ?
எந்த ஆவணங்கள் தொலைந்தாலும் முதலில் காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்க வேண்டும்.
உங்களுக்கு அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு சென்று சான்றிதழ் தொலைந்தமைக்கான புகார் மனுவை அளிக்கவும். தற்போது நீங்கள் Online மூலமாக கூட புகாரை தெரிவிக்கும் வசதி உள்ளது.
உங்கள் புகார் மனுவிற்கான ஒப்புகை எண்ணை கண்டிப்பாக வாங்கிக்கொள்ளவும்.
சான்றிதழ் தொலைந்துவிட்டால் உங்கள் மாவட்டங்களில் உள்ள ஏதேனும் மூன்று அல்லது நான்கு பத்திரிகைகளில் தெரியப்படுத்தவேண்டும்.
தினசரி நாளிதழ்களில் அச்சிடப்பட்ட காணவில்லை விளம்பரத்தை குறிப்பு புகைப்படமாக எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்
எந்த சான்றிதழ் தொலைந்துவிட்டதோ சம்பந்தப்பட்ட பள்ளி அல்லது கல்லூரிக்கு செல்லவேண்டும். காவல் நிலைய புகார் மற்றும் பத்திரிகை செய்தி மற்றும் உங்களின் விபரங்களை காண்பித்து தலைமை ஆசிரியர் அல்லது முதல்வரிடம் (principal) சான்றிதழ் தொலைந்தமைக்கான சான்றிதழை அலுவலக Seal வைத்து வாங்கிக்கொள்ளவும்.
இவை அனைத்தும் சரியாக தயார் செய்துவிட்டு உங்கள் கிராமத்திற்கான வட்டாச்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளிக்கவேண்டும்.
புகார் மனுவுடன் இணைக்கப்படவேண்டிய ஆவணங்கள்:
- புகைப்படம்,
- காவல் நிலைய புகார் எண்
- பள்ளி /கல்லூரி மூலமாக பெற்ற ஒப்புகை சான்றிதழ்
- ஆதார் எண்,
- இருப்பிட முகவரிக்கான சான்றிதழ் / ஆதார் போதுமானது
உங்களின் மனு பெறப்பட்டதும் அதற்கான ஒப்புகை எண் வழங்கப்படும். சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலர் மற்றும் வருவாய் ஆய்வாளர் மூலமாக விண்ணப்பம் பரிசீலனை செய்யப்படும்.
வட்டாச்சியர் கையப்பமிட்ட ஒப்புதல் சான்றிதழ் உங்களுக்கு கிடைத்தவுடன் நீங்கள் விண்ணப்பிக்கலாம்.
நகல் சான்றிதழ்கள் விண்ணப்பிப்பது எப்படி?
வட்டாச்சியர் அலுவலக கடிதத்துடன் நகல் சான்றிதழ்கள் பெறுவதற்கான விண்ணப்பத்தை சரியாக பூர்த்தி செய்யவேண்டும்.
நகல் சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப கட்டணம் DD / காசோலை முறையில் செலுத்தலாம்.
நகல் சான்றிதழுக்கு 505 ரூபாய் காசோலை
மூன்று நகல்களுக்கு 755 ரூபாய் காசோலை
SBI மூலமாக செலுத்தலாம்.
இந்த விண்ணப்பத்துடன் சான்றிதழ் தொலைந்தமைக்கான ஆவணங்களுடன் சேர்த்து சம்பந்தப்பட்ட பள்ளி அல்லது கல்லூரியில் சமர்ப்பிக்கவேண்டும்.
உங்கள் பள்ளி / கல்லூரியில் இந்த விண்ணப்பம் பரிசீலிக்கப்பட்டு தலைமை அலுவலகம் மூலமாக உங்கள் வீட்டின் முகவரிக்கு சான்றிதழ் தபால் மூலம் அனுப்பிவைக்கப்படும்.
சான்றிதழ் தொலைந்தமைக்கான விண்ணப்பபடிவம் இங்கு பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
Duplicate Marksheet SSLC: http://www.dge.tn.gov.in/docs/DUP_SSLC.pdf
Duplicate Marksheet HSLC: http://www.dge.tn.gov.in/docs/DUP_HSC.pdf
இந்த தகவல் பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும்
நன்றி !!!
No comments: