SUKANYA SAMRIDHI YOJANA SCHEME | செல்வ மகள் சேமிப்பு திட்டம் | எப்படி பயன்பெறுவது?

அனைவருக்கும் வணக்கம் !!!


இந்த பதிவின் மூலமாக மத்திய அரசின் மூலமாக கொண்டுவரப்பட்டுள்ள செல்வ மகள் சேமிப்பு திட்டத்தை பற்றி தெரிந்துகொள்ளலாம்.




மத்திய அரசின் செல்வமகள் சேமிப்பு திட்டம்


பெண் குழந்தைகளின் எதிர்காலத்திற்கு பெரிதும் உதவும் வகையில் சேமிப்பு திட்டமாக கொண்டுவரப்பட்டுள்ளது. இந்திய அஞ்சல்துறை மூலமாக இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

செல்வமகள் சேமிப்புத்திட்டம் எப்படி தொடங்குவது?


பெண் குழந்தைகள் பிறந்ததில் இருந்து 10 வயதிற்குள் இந்த திட்டத்தில் சேரலாம். குழந்தையின் பெற்றோர்கள் பெயரில் இந்த கணக்கு தொடங்கி சேமிப்பு வைக்கலாம். உங்களுக்கு அருகாமையில் உள்ள அஞ்சல் அலுவலகத்திற்கு சென்று இந்த கணக்கை தொடங்கலாம்.

தேவைப்படும் ஆவணங்கள்:


  • குழந்தையின் பிறப்பு சான்றிதழ் 
  • ஆதார் கார்டு / இதர ஆவணங்கள் 
  • பெற்றோர்களின் ஆதார் கார்டு 
  • புகைப்படம் 

இந்த அனைத்து ஆவணங்களுடன் அருகில் உள்ள தபால் நிலையத்திற்கு சென்று செல்வமகள் திட்டத்திற்கான விண்ணப்பபடிவம் பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும்.

விண்ணப்பித்த 1 முதல் 2 நாட்களுக்குள் உங்களுக்கான திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுவிடும். மேலும் இந்த திட்டத்தில் சேரும் பெற்றோர்களுக்கு வரி செலுத்துவத்தில் இருந்து விலக்கும் அளிக்கப்படுகிறது.

பயன்கள்:


அனைத்து சேமிப்பு திட்டங்களிலும் இல்லாத அளவிற்கு 7.6% வட்டி வழங்கப்படுகிறது.
இந்த திட்டத்தில் சேமிப்பு வைத்திருந்தால் பெண் குழந்தைகளின் கல்வி மற்றும் திருமணத்தின் பொழுது பெரிதும் உதவும்.

பெண்களின் 21 வயது வரை இந்த சேமிப்புத்திட்டத்தில் இணையலாம். அதற்குப்பிறகு கணக்கை முடிக்கும்பொழுது மூன்று மடங்கு தொகை திரும்ப கிடைக்கும்.

டெபாசிட் செய்வது எப்படி?

செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் 250 முதல் எவ்வளவு வேண்டுமானாலும் மாதத்திற்கு செலுத்தலாம். அதிகபட்சமாக 1 லட்சம் வரை மாதத்திற்கு செலுத்தலாம்.

தபால் நிலையத்திற்கு சென்று காசோலை / DD / நேரடியாக பணமாகவும் செலுத்தலாம். 

உங்கள் கணக்கிற்கு நீங்களே ஆன்லைன் மூலமாகவும் செலுத்தலாம்.

சிறப்பம்சங்கள் மற்றும் நன்மைகள்:


குழந்தை பிறந்தது முதல் 10 வயதுக்குள் அனைத்து பெண் குழந்தைகளுக்கும் 
விண்ணப்பிக்கலாம்.

மற்ற எந்த சேமிப்பு திட்டங்களிலும் இல்லாத அளவிற்கு கூடுதலான வட்டி நமக்கு கிடைக்கும்.

ஒரு இடத்தில் இருந்து வேறு இடத்திற்கு சென்றுவிட்டால் கூட இந்த திட்ட கணக்கையும் இலவசமாக மாற்றிக்கொள்ளமுடியும்.

தகுதி:


  • பெண் குழந்தைகள் மட்டுமே விண்ணப்பிக்கமுடியும்
  • அதிகபட்சமாக 10 வயதுவரை விண்ணப்பிக்கலாம்.
  • பெற்றோர்கள் பெயருடன் சேர்த்து இந்த திட்ட கணக்கை தொடங்கலாம்.

    மேலும் இந்த திட்டத்தில் பல்வேறு வகையான சலுகைகளை மத்திய அரசு வழங்க திட்டமிட்டுள்ளது.

முக்கிய அம்சங்கள்:


  • உங்களின் விருப்பம்போல் மாதம் 250 ரூபாய் முதல் 1,50,000 ரூபாய் வரை செலுத்தலாம்.
  • மாதம் மாதம் செலுத்தவேண்டிய அவசியமும் இல்லை. ஒரு வருடத்திற்குள் எப்போது வேண்டுமென்றாலும் செலுத்தலாம்.
  • பிறந்த குழந்தை முதல் 10 வயது வரை அனைத்து குழந்தைகளுக்கும் பொருந்தும்.
  • வருமான வரி தாக்கல் செய்யும்பொழுது 80சி பிரிவில் சலுகை கிடைக்கும்.

SUKANYA SAMRIDHI YOJANA SCHEME | செல்வ மகள் சேமிப்பு திட்டம் | எப்படி பயன்பெறுவது? SUKANYA SAMRIDHI YOJANA SCHEME |  செல்வ மகள் சேமிப்பு திட்டம் | எப்படி பயன்பெறுவது? Reviewed by eGovernance Helpdesk on October 02, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.