ஒவ்வொரு மாதமும் 1000 ரூபாய் பெறுவது எப்படி ? |TAMILNADU OLD AGE PENSION SCHEME | EXPLAINED IN TAMIL
அனைவருக்கும் வணக்கம் !!!
இந்த பதிவின் மூலமாக தமிழ்நாடு அரசின் மாதம் 1000 ரூபாய் பெறுவதற்கான சிறப்பு ஓய்வூதிய திட்டத்தை பற்றி தெரிந்துகொள்ளலாம்.
சிறப்பு ஓய்வூதிய திட்டம்:
தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து மக்களும் ஓய்வூதியத் திட்டத்தின் மூலமாக மாதம் 1000 ரூபாய் பெற முடியும். இவ்வளவு நாட்களாக இந்த ஓய்வூதியம் பெறுவதற்கு விண்ணப்பம் பூர்த்தி செய்து வட்டாச்சியர் அலுவலகத்தில் சமர்ப்பிக்கும் நடைமுறை இருந்து வந்தது. இனிமேல் நீங்கள் உதவித்தொகை பெறுவதற்கு online மூலமாக விண்ணப்பிக்கலாம்.
ஓய்வூதிய திட்டத்தின் சிறப்பம்சங்கள்:
தமிழ்நாடு முழுவதும் உள்ள ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் மாதம் மாதம் உதவித்தொகை வழங்கும் திட்டம் நடைமுறையில் உள்ளது. தற்பொழுது 6 விதமான ஓய்வூதிய திட்டங்களுக்கு Online -ல் விண்ணப்பிக்கலாம்
- முதியோர் உதவித்தொகை
- கணவரால் கைவிடப்பட்ட பெண்களுக்கான உதவித்தொகை
- விதவைகளுக்கான உதவித்தொகை
- மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை
- முதலமைச்சரின் உழவர் பாதுகாப்பு திட்டத்தின் உதவித்தொகை
அனைத்து உதவித்தொகை பெறுவதற்கும் சரியான ஆவணங்கள் சமர்ப்பிக்க வேண்டும்.
உதவித்தொகைக்கு விண்ணப்பிப்பது எப்படி?
நீங்கள் எந்த உதவித்தொகை விண்ணப்பிப்பதாக இருந்தாலும் ஆதார் கார்டு கண்டிப்பாக வேண்டும்.
உங்கள் குடும்பத்தில் உள்ள உறுப்பினர்களின் விபரங்கள் மற்றும் என்ன வேலை செய்கிறார்கள் என்று தெரியப்படுத்த வேண்டும்.
தேவைப்படும் உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க உங்களுக்கு அருகாமையில் இருக்கும் அரசு இ சேவை மையங்களுக்கு செல்ல வேண்டும்.
உங்களுக்கான விண்ணப்பம் Online -ல்பதிவு செய்தமைக்கான ஒப்புகை சீட்டு உங்களுக்கு கிடைக்கும். விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டதா இல்லையா என Online மூலமாக தெரிந்துகொள்ளலாம்.
உதவித்தொகை விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள் என்ன ?
- புகைப்படம்
- ஆதார் கார்டு
- ரேஷன் கார்டு / ஸ்மார்ட் கார்டு
- குடும்ப உறுப்பினர்களின் விபரங்கள்
- வங்கிக்கணக்கு புத்தகம்
- ஆதார் ஒப்புதல் படிவம்
சேவை மையத்தில் இந்த ஆவணங்கள் எல்லாம் சரியாக கணினியில் Scan செய்யப்பட்டு விண்ணப்பிக்கப்படும். உங்களின் பதிவு எண் தொலைபேசிக்கு குறுந்செய்தி வழியாக அனுப்பிவைக்கப்படும்.
எப்படி உதவித்தொகை விண்ணப்பம் பரிசீலிக்கப்படும்?
சேவை மையத்தில் Online மூலமாக உதவித்தொகை விண்ணப்பம் சமர்பித்தவுடன் சம்மபந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலருக்கு சென்றுவிடும்.
விண்ணப்பதாரரின் விபரங்கள் சரிபார்க்கப்பட்டு வருவாய் ஆய்வாளருக்கு அனுப்பப்படும்.
வட்டாச்சியர் அலுவலகத்தில் வாட்டாச்சியர் மூலமாக ஒப்புதல் வழங்கியபின் உதவித்தொகை கிடைக்கும்.
நீங்கள் எந்த ஒரு அலுலகத்திற்கும் நேரில் செல்ல வேண்டியது இல்லை. விண்ணப்பம் பரிசீலனை செய்யப்பட்ட பின் உங்களுக்குக்கான உதவித்தொகை மாதம் மாதம் 1000 ரூபாய் வங்கிக்கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும்.
உதவித்தொகை பெற முக்கியமாக தெரிந்துகொள்ள வேண்டிய குறிப்புகள்
உங்களின் விண்ணப்பம் அனைத்தும் உண்மைத்தன்மை சரிபார்க்கப்பட்டு ஒப்புதல் செய்யப்படும். உண்மைக்கு புறம்பான தகவல் தெரிவித்திருந்தால் உதவித்தொகை நிறுத்தப்படும்.
ஒவ்வொரு கிராமங்களிலும் முன்னுரிமையின் அடிப்படையில் மட்டுமே உதவித்தொகை தரப்படும்.
உங்கள் கிராமத்திற்கு எந்த வங்கிகளில் இந்த திட்டம் தரப்படுகிறதோ அந்த வங்கி கணக்கு எண் மட்டும் தரவேண்டும். சரியான வங்கிக்கணக்கு எண் இல்லையேன்றால் பணம் கிடைக்காது.
பொது சேவை மையங்கள் எங்கு உள்ளன?
தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டஆட்சியர் அலுவலகங்கள், வட்டாச்சியர் அலுவலகங்கள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மற்றும் கிராம சேவை மையங்களில் இந்த உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்.
உங்களுக்கு அருகாமையில் இருக்கும் மையங்களை கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையதள பக்கத்தில் தெரிந்துகொள்ளலாம்.
ஒவ்வொரு உதவித்தொகையும் விண்ணப்பிப்பது எப்படி என்பது பற்றி தெளிவான தகவல்கள் அடுத்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.
உதவித்தொகை பெறுவது தொடர்பாக ஏதேனும் சந்தேகம் இருந்தால் Comment செய்யவும். இந்த தகவல் பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும்.
நன்றி
ஒவ்வொரு மாதமும் 1000 ரூபாய் பெறுவது எப்படி ? |TAMILNADU OLD AGE PENSION SCHEME | EXPLAINED IN TAMIL
Reviewed by eGovernance Helpdesk
on
October 05, 2020
Rating:
No comments: