National Schloarship Portal (NSP) - Scheme Eligibility, Registration, Benifits, Apply Procedure

அனைவருக்கும் வணக்கம் !!!

இந்த பதிவின் மூலமாக பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் அரசு மூலமாக வளழங்கப்படும் உதவித்தொகைக்கு எப்படி விண்ணப்பிப்பது என்பது பற்றி தெரிந்துகொள்ளலாம்.



அரசு உதவித்தொகை வழங்கும் திட்டம்:


பள்ளி மற்றும் கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கு அவர்களின் படிப்பிற்கு உதவும் வகையில் அரசு உதவித்தொகைகளை வழங்கிவருகிறது. மத்திய மற்றும் மாநில அரசுகளின் மூலமாக தனித்தனியே துறை வாரியாக உதவித்தொகை கிடைக்கும். 

இந்த உதவித்தொகை பெறுவதற்கு மாணவர்கள் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிப்பது எப்படி?


மத்திய அரசின் மின்னாளுமை திட்டத்தின் சிறப்பம்சமாக இந்த உதவித்தொகை விண்ணப்பம் மற்றும் பரிசீலனை செய்தல் அனைத்தும் ஆன்லைன் மூலம் மிகவும் எளிதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

உதவித்தொகை விண்ணப்பிக்க விருப்பம் உள்ள நபர்கள் எந்த உதவித்தொகை கிடைக்கும் என்பதனை சுலபமாக தெரிந்துகொள்ளலாம்.

ஒன்றாம் வகுப்பு முதல் கல்லூரி வரை படிக்கும் அனைத்து மாணவர்களும் விண்ணப்பிக்கலாம்.

முக்கியமான அம்சங்கள்:


  • மாணவர்கள் தனித்தனியே பயனர் பெயர் மற்றும் கடவுச்சொல் ரெஜிஸ்டர் செய்யவேண்டும்.
  • தேவையான உதவித்தொகை விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய வேண்டும்.
  • விண்ணப்ப பதிவு எண் கிடைத்தபின் எப்பொழுது கிடைக்கும் என ஆன்லைன் மூலமாக தெரிந்துகொள்ளலாம்.

விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள்:


  • ஆதார் கார்டு 
  • பள்ளி / கல்லூரி அடையாள அட்டை 
  • வங்கி கணக்கு எண்
  • சாதி சான்றிதழ் 
  • இருப்பிட சான்றிதழ்

ஆன்லைன் மூலமாக எந்த உதவித்தொகை விண்ணப்பித்தாலும் இந்த அனைத்து ஆவணங்களையும் சமர்ப்பிக்கவேண்டும்.

எப்படி விண்ணப்பம் பரிசீலனை செய்யப்படும்:


ஆன்லைன் மூலமாக விண்ணப்பம் கொடுத்தவுடன் சம்பந்தப்பட்ட பள்ளி / கல்லூரிக்கு அனுப்பபடும்

சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் வங்கி கணக்கு எண் சரிபார்ப்பு முடிந்தவுடன் தலைமை அலுவலகத்திற்கு அனுப்பபடும்.

விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டதும் வங்கி கணக்கிற்கு நேரடியாக பணம் கிடைத்துவிடும்.

சிறப்பம்சங்கள்:


  • நாடு முழுவதும் உள்ள அனைத்து உதவித்தொகை பற்றியும் தெரிந்துகொள்ளலாம்.
  • தகுதியுள்ள உதவித்தொகைக்கு எளிதாக விண்ணப்பிக்கலாம்.
  • ஒரே போர்டல் மூலமாக அனைத்து சேவைகளையும் பெறலாம்.
  • விண்ணப்பத்தின் தற்போதைய நிலையை எளிதாக தெரிந்துகொள்ளலாம்.

வருட வருடம் உதவித்தொகை பெறுவதற்கு இந்த போர்டல் மூலமாக புதுப்பிக்கும் வசதியும் உள்ளது.

விண்ணப்பிக்க தகுதியானவர்கள்:

பள்ளி / கல்லூரி பயிலும் மாணவர்கள்

1 முதல் 10ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் ப்ரீ மெட்ரிக் உதவிதொகை பெறலாம்.

11 முதல் கல்லூரி வரை படிக்கும் மாணவர்கள் போஸ்ட் மெட்ரிக் உதவித்தொகை பெறலாம்.

மேலும் அனைத்து மாணவர்களுக்கும் துறைகளின் அடிப்படையிலும் உதவித்தொகை வழங்கப்படுகிறது.
National Schloarship Portal (NSP) - Scheme Eligibility, Registration, Benifits, Apply Procedure National Schloarship Portal (NSP) - Scheme Eligibility, Registration, Benifits, Apply Procedure Reviewed by eGovernance Helpdesk on October 01, 2020 Rating: 5

1 comment:

Powered by Blogger.