How to Get Smart Adhaar Card - Step by Step Procedure, New Features, Benifits, Explained in Tamil

அனைவருக்கும் வணக்கம் !!!

இந்த பதிவின் மூலமாக ஸ்மார்ட் ஆதார் கார்டு பெறுவது எப்படி என்று தெரிந்துகொள்ளலாம்.



ஆதார் கார்டு என்றால் என்ன ?


இந்தியாவில் உள்ள அனைத்து மக்களுக்கும் தனிமனித அடையாள எண்ணாக ஆதார் வழங்கப்படுகிறது. அரசு மற்றும் தனியார் துறை சார்ந்த அனைத்து சேவைகளுக்கும் இந்த ஆதார் எண் கண்டிப்பாக தேவைப்படும். 


ஒருவரின் முகவரி, அடையாளச்சான்று, பிறந்த தேதி சான்றிதழாகவும் இந்த ஆதார் எண்ணை பயன்படுத்திக்கொள்ளலாம். இந்த ஆதார் அட்டை மக்களுக்கும் தபால் மூலமாக கிடைத்திருக்கும்.

ஆதார் கார்டு தொலைந்துவிட்டதா ? 


உங்களின் ஆதார் கார்டை ஆன்லைன் மூலமாக இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளவும் முடியும். இதனை இ -ஆதார் என்றும் சொல்லலாம். 


நீங்கள் எங்கும் சென்று பணம் செலவு பண்ண தேவையில்லை. அனைத்து ஆதார் சேவைகளும் நீங்களே ஆன்லைன் மூலமாக செய்துகொள்ளலாம்.

ஸ்மார்ட் ஆதார் கார்டு ஒரு புதிய அறிமுகம்


ஏற்கனவே வீட்டிற்கு தபால் மூலம் வந்திருக்கும் ஆதார் கார்டு மிகவும் மெல்லிசாக இருக்கும். அதிகமாக உபயோகப்படுத்தியிருந்தால் கிழிந்தும் போயிருக்கலாம். 


மழையில் நினையாத மற்றும் கிழிந்துபோகாத அளவிற்கு தற்பொழுது பிளாஸ்டிக் ஸ்மார்ட் ஆதார் கார்டு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த கார்டின் சிறப்பம்சங்கள்.

  • ஆதார் பாதுகாப்பு குறியீடு 
  • அரசு ஹாலோகிராம் 
  • பிளாஸ்டிக் பிவிசி ஆதார் கார்டு 
  • எங்கும் எடுத்துச்செல்லும் வகையில் வடிவமைப்பு 

இந்த ஸ்மார்ட் ஆதார் கார்டு வெளியில் எங்கும் வாங்க முடியாது. அரசு தரப்பில் இருந்து வீட்டிற்கே தபால் மூலமாக கிடைத்துவிடும்.

எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?


ஆதார் அட்டை ஆர்டர் செய்வதற்கு ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க uidai.gov.in என்ற இணையதள முகவரியில் பெறலாம்.

  • மை ஆதார் எனும் லிங்க் ஐ கிளிக் செய்யவும்.
  • பிளாஸ்டிக் பிவிசி ஆதார் கார்டு பிரிண்ட் எனும் வசதியை கிளிக் செய்யவும்.
  • உங்களின் 12 இலக்க ஆதார் எண்ணை சரியாக குறிப்பிடவும்
  • கீழே உள்ள பாதுகாப்பு குறியீடு எண்ணை சரியாக உள்ளீடு செய்யவும்.
  • ங்கள் தொலைபேசி எண் அதாரில் இணைக்கப்பட்டிருந்தால் ஒருமுறை கடவுச்சொல் கிடைக்கும்.
உங்கள் தொலைபேசி எண் அதாரில் இணைக்கப்பட்டிருந்தால் ஒருமுறை கடவுச்சொல் கிடைக்கும். 

அந்த எண்ணை சரியாக உள்ளீடு செய்து " Proceed " என்று கிளிக் செய்யவும்.

உங்களின் ஆதார் அட்டையின் விபரங்கள் சரிபார்த்துக்கொள்ள வசதி இருக்கும்.

விண்ணப்ப கட்டணம் எப்படி செலுத்த வேண்டும் ?



இந்த கார்டு பெறுவதற்கான விண்ணப்ப கட்டணம் 50 ரூபாய் மட்டுமே. ஆன்லைன் மூலமாக கட்டணம் செலுத்தும் வசதியும் உள்ளது.


இணையதள வாங்கி சேவை, கிரிடிட் கார்டு, டெபிட் கார்டு மூலமாக செலுத்தலாம்.


உங்கள் விண்ணப்பத்திற்கு குறியீடு எண் கிடைக்கும். உங்கள் ஸ்மார்ட் ஆதார் கார்டு எப்பொழுது கிடைக்கும் என ஆன்லைன் மூலமாக தெரிந்துகொள்ளலாம்.

அதாரில் தொலைபேசி எண் இணைக்கப்படாவிட்டாலும் உங்களின் தொலைபேசி எண்ணை உள்ளீடு செய்து இந்த ஸ்மார்ட் ஆதார் கார்டு பெற்றுக்கொள்ளலாம்.

புதிய ஆதார் கார்டு பெறுவது எப்படி?


ஆதார் கார்டு இல்லாமல் இருந்தால் கண்டிப்பாக புதிய ஆதார் பெற வேண்டும். புதிய ஆதார் கார்டு விண்ணப்பிக்க அருகில் உள்ள ஆதார் சேவை மையத்திற்கு செல்லவேண்டும்.

ஆதார் சேவை மையங்கள் அருகில் எங்கு உள்ளன என்று ஆன்லைன் மூலமாக தெரிந்துகொள்ளலாம்.

ஆதார் கார்டு விண்ணப்பிக்க தேவையான அனைத்து ஆவணங்களையும் சரியாக சமர்ப்பிக்க வேண்டும்.

விண்ணப்பத்தபின் 5முதல் 10 நாட்களுக்குள் ஆதார் எண் கிடைத்துவிடும்.



How to Get Smart Adhaar Card - Step by Step Procedure, New Features, Benifits, Explained in Tamil How to Get Smart Adhaar Card - Step by Step Procedure, New Features, Benifits, Explained in Tamil Reviewed by eGovernance Helpdesk on September 28, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.