Temporary Cracker License - Eligibility, Benifits, Apply Procedure | Tamilnadu Cracker License
வணக்கம் நண்பர்களே !!!
இந்த பதிவின் மூலமாக பட்டாசு கடை வைப்பதற்கு தேவையான License எப்படி வாங்குவது என தெரிந்துகொள்ளலாம் .
தமிழ்நாட்டில் வருட வருடம் பட்டாசு கடை வைப்பதற்கான உரிமம் தற்காலிகமாக வழங்கப்படும் .
இந்த உரிமம் தீபாவளிக்கு முன் சரியாக மாதத்திற்கு முன் இருந்து வழங்கப்படும் . பட்டாசு கடைகள் அனைவரும் இந்த உரிமம் கண்டிப்பாக பெற வேண்டும் .
கடை வைக்க தேவையான விபரங்கள் :
கடை எங்கு உள்ளதோ அதற்கு பக்கத்தில் இருக்கும் காவல் நிலையத்தில் ஒப்புகை பெற வேண்டும் .
கடை எங்கு உள்ளதோ அந்த கிராமம் எந்த Division -ல் உள்ளதோ அங்கு Revenue Division Officer இடம் ஒப்புகை பெற வேண்டும்
மாவட்ட Fire and Safety துறையிலும் ஒப்புதல் பெற வேண்டும்.
தேவைப்படும் ஆவணங்கள் என்ன ?
- கடையின் முகவரி
- விண்ணப்பதாரரின் ஆதார் கார்டு
- போட்டோ
- கடையின் Site Map
- கடையின் Lease Document
- பாதுகாப்பு உபகரணங்கள் பற்றிய விபரங்கள்
பட்டாசு கடை வைப்பதற்கு இரண்டு முறைகள் உள்ளன
கடை Corporation Area -ல் இருந்தால் CommisionerOffice -ல் ஒப்புதல் பெறலாம்
கடை கிராம புறம் / Town பஞ்சாயத்து Area -ல் இருந்தால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒப்புதல் பெறலாம்
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணம் செலுத்துவதற்கான ரசீது தருவார்கள் . வங்கிகளில் செண்டு அந்த ரசீதின் மூலமாக பணம் செலுத்த வேண்டும் .
பணம் செலுத்தியதற்கான Challan கண்டிப்பாக வேண்டும்.
License விண்ணப்பிப்பது எப்படி ?
தற்காலிக பட்டாசு கடை உரிமம் பெறுவதற்கு Online -ல் விண்ணப்பிக்க வேண்டும் .
உங்களிடம் இந்த ஆவணங்கள் எல்லாம் சரியாக இருந்தால் உங்களுக்கு பட்டாசு கடை license கிடைக்கும்.
இந்த விண்ணப்பத்திற்கு கட்டணமாக 500 ரூபாய் பொது சேவை மையங்களில் வசூலிப்பார்கள்
பொது சேவை மையத்தில் விண்ணப்பிக்கும் முறை
தமிழ்நாடு அரசு துறை சார்ந்த அனைத்து சேவைகளை பெறுவதற்கும் CAN Number கண்டிப்பாக தேவைப்படும்
உங்களிடம் இந்த CAN Number இருந்தால் அதுவே போதும் . இல்லையென்றால் புதிதாக CAN Create செய்வார்கள் .
தமிழ்நாடு அரசு துறை சார்ந்த Online சான்றிதழ்களில் Photo கண்டிப்பாக Print ஆகும்.
உங்கள் அனைத்து விபரங்களும் சரியாக உள்ளதா என Check செய்தபின்பு Application Submit செய்வார்கள்.
உங்களுக்கான விண்ணப்பத்திற்கு ஒப்புகை சான்றிதழ் மற்றும் விண்ணப்ப எண் தருவார்கள் . உங்களுடைய சான்றிதழ் Process செய்துவிட்டார்களா என Status Online -ல் பார்த்துக்கொள்ளமுடியும்.
உங்கள் விண்ணப்பம் Approve ஆகிவிட்டால் சான்றிதழை உங்கள் Mobile / System மூலமாக Download செய்துகொள்ளலாம்.
Temporary Cracker License - Eligibility, Benifits, Apply Procedure | Tamilnadu Cracker License
Reviewed by eGovernance Helpdesk
on
August 29, 2020
Rating:
No comments: