பொது சேவை மையத்தில் விண்ணப்பித்த சான்றிதழை Download செய்வது எப்படி? How to Check Status of Certificates Applied in CSC Centers ? #TNeGA #CSC #DIGITALINDIA
அனைவருக்கும் வணக்கம் !!!
இந்த பதிவின் மூலமாக பொது சேவை மையங்களில் விண்ணப்பித்த சான்றிதழை பதிவிறக்கம் செய்வது எப்படி என்று தெரிந்துகொள்ளலாம்.
பொது சேவை மையங்கள் எங்கு உள்ளன ?
தமிழ்நாடு முழுவதும் அரசு சம்பந்தப்பட்ட அனைத்து சான்றிதழ்களும் விண்ணப்பித்து தருவதற்கு சேவை மையங்கள் உருவாக்கப்பட்டன. பொது மக்களும் தங்களுக்கு தேவைப்படும் சான்றிதழ்களை பெற Online மூலமாக விண்ணப்பிக்கலாம்.
என்ன என்ன சான்றிதழ்கள் விண்ணப்பிக்கலாம்?
- வருவாய் துறை சான்றிதழ்
- பட்டா மாறுதல்
- திருமண உதவித்தொகை
- முதியோர் உதவித்தொகை
- ரேஷன் கார்டு தொடர்பான சேவைகள்
இதுபோன்ற பல்வேறு வகையான அரசு சம்பந்தப்பட்ட துறைகளுக்கு விண்ணப்பம் Online மூலமாக தரலாம். அனைவருக்கும் முக்கியமாக தேவைப்படும் ஜாதி சான்றிதழ், வருமான சான்றிதழ், இருப்பிட சான்றிதழ், முதல் பட்டதாரி சான்றிதழ் விண்ணப்பிக்கலாம்.
சான்றிதழ்கள் விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள் என்ன?
அனைத்து வருவாய்துறை சான்றிதல்களுக்கும் சம்பந்தப்பட்ட ஆவணங்களை சரியாக தரவேண்டும்.
- புகைப்படம்
- ஆதார் கார்டு
- குடும்ப ரேஷன் கார்டு / ஸ்மார்ட் கார்டு
- சுயஉறுதிமொழி படிவம்
அனைத்து சேவைகள் பெறுவதற்கும் ஆதார் கார்டு கண்டிப்பாக தேவை. பொது சேவை மையங்களில் ஆவணங்கள் அனைத்தும் ஸ்கேன் செய்யப்பட்டு பதிவு செய்வார்கள்.
விண்ணப்ப எண் தெரிந்துகொள்வது எப்படி?
எந்த சான்றிதழ் தேவைப்பட்டாலும் Online மூலமாக விண்ணப்பித்தவுடன் தொலைபேசிக்கு குறுஞ்செய்தி வழியாக விண்ணப்ப எண் அனுப்பப்படும். மேலும் சேவை மையத்தில் விண்ணப்பித்தமைக்கான ஒப்புகைசீட்டும் வழங்கப்படும்.
உங்கள் விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டதா இல்லையா என Online மூலமாக தெரிந்துகொள்ளலாம்.
சான்றிதழின் தற்போதைய நிலையை தெரிந்துகொள்வது எப்படி?
தமிழக அரசின் https://tnedistrict.tn.gov.in/tneda என்ற இணையதளம் மூலமாக சான்றிதழின் நிலையை தெரிந்துகொள்ளலாம்.
விண்ணப்ப எண்ணை சரியாக உள்ளீடு செய்து Check Status கிளிக் செய்யவும்.
உங்கள் விண்ணப்பம் தற்பொழுது எந்த அலுவலரிடம் உள்ளது என தெரியும்.
அனைத்து வருவாய்துறை சான்றிதழ்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ள அலுவலர்கள் மூலமாக பரிந்துரை செய்யப்படும்.
கிராம நிர்வாக அலுவலர் -> வருவாய் ஆய்வாளர் -> மண்டல துணை வட்டாச்சியர்
சான்றிதழை பதிவிறக்கம் செய்வது எப்படி?
தமிழக அரசின் https://tnedistrict.tn.gov.in/tneda என்ற இணையதளம் மூலமாக சான்றிதழை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
- இந்த பக்கத்தில் உள்ள Verify Certificate எனும் லிங்க் -ஐ கிளிக் செய்யவும்.
- உங்களின் விண்ணப்ப எண்ணை சரியாக உள்ளீடு செய்து Verify லிங்க் -ஐ கிளிக் செய்யவும்.
- Download Certificate எனும் லிங்க் மூலமாக பதிவிறக்கம் செய்யலாம்.
அனைத்து சான்றிதழ்களும் டிஜிட்டல் முறையில் கையப்பமிடப்பட்டிருக்கும். இந்த சான்றிதழை உங்கள் தொலைபேசி அல்லது கணினி மூலம் சேமித்து வைத்துக்கொள்ளவும்.
எந்த அரசு அலுவலகத்தில் தேவைப்பட்டாலும் இந்த சான்றிதழை காண்பித்துக்கொள்ளலாம். மேலும் ஒரு சில சான்றிதல்களுக்கு காலாவதி ஆகும் தேதியும் குறிப்பிடப்பட்டிருக்கும்.
தேவைப்படும் சான்றிதழ்களை புதுப்பித்துக்கொள்ளலாம்.
பொது சேவை மையத்தில் விண்ணப்பித்த சான்றிதழை Download செய்வது எப்படி? How to Check Status of Certificates Applied in CSC Centers ? #TNeGA #CSC #DIGITALINDIA
Reviewed by eGovernance Helpdesk
on
July 31, 2020
Rating:
No comments: