ePass Apply பண்ண போறிங்களா ? Reject ஆகம இருக்க எப்படி Apply பண்ணனும் தெரியுமா ? #TNePass #TNGovt #eDesk #ePassUpdate
அனைவருக்கும் வணக்கம் !!!
இந்த பதிவின் மூலமாக தற்பொழுது நடைமுறையில் இருந்துவரும் ePass பற்றி தெரிந்துகொள்ளலாம்.
அனைத்து மாநிலங்களிலும் ePass நடைமுறை கடைபிடிக்கப்பட்டு வருகிறது. வேகமாக பரவிவரும் கொரோனா தொற்றினை கட்டுப்படுத்த இந்த ePass மிகவும் முக்கியமான தேவையாக கருதப்படுகிறது.
வாகனங்கள் மூலமாக ஒரு இடத்திலிருந்து மற்றோரு இடத்திற்கு சென்று வர ePass கட்டாயம்.
விண்ணப்பிப்பது எப்படி?
தமிழ்நாட்டில் ePass பெறுவதற்கு tnepass.tnega.org என்ற அதிகாரபூர்வ இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
உங்களின் பாஸ் சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர் அலுலகங்களில் பரிசீலனை செய்யப்பட்டு பதிவிறக்கம் செய்துகொள்ளும் வசதி தொலைபேசி எண்ணிற்கு குறுஞ்செய்தி மூலமாக அனுப்பிவைக்கப்படுகிறது.
தளர்வுகளுடன் கூடிய முக்கியமான தகவல்
தமிழகத்தில் தற்பொழுது தளர்வுகள் அறிவித்திருக்கும் நிலையில் ePass இனிமேல் சுற்றுலா தளங்கள் மற்றும் மலைப்பகுதிகளுக்கு செல்ல மட்டும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் மூலம் தரப்படுகிறது. Pass அனைத்தும் உடனடியாக பெற்றுக்கொள்ளலாம்.
மருத்துவ காரணங்களுக்காக விண்ணப்பிக்கும் Pass உடனடியாக 1மணி நேரத்திற்குள் ஒப்புதல் தரப்படுகிறது.
மேலும் விமானம் வழியாக பயணம் மேற்கொள்பவர்களுக்கு ePass கட்டாயமாக்கப்பட்டுள்ளது. விமான நிலையத்தில் Pass காண்பித்தால் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். கொரானா பரிசோதனை செய்த சான்றிதழையும் காண்பிக்கவேண்டும்.
தேவைப்படும் ஆவணங்கள்:
- தெலைபேசி எண்
- ஆதார் கார்டு
- பயணிப்பவர்களின் விபரங்கள்
Online மூலமாக பாஸ் விண்ணப்பிக்க உங்களின் தொலைபேசி எண்ணிற்கு கடவுச்சொல் அனுப்பப்படும். அதை சரியாக உள்ளீடு செய்யவேண்டும்.
ePass பெற முக்கியமான காரணங்களுக்கு மட்டுமே ஒப்புதல் வழங்கப்படும்
- மருத்துவமனை செல்வதற்கு
- இறப்பு நிகழ்வுகளுக்கு
- திருமண நிகழ்ச்சிகளுக்கு
மேலும் உங்களுக்கு தேவைப்படும் வாகனங்களின் பதிவு எண் சரியாக சமர்ப்பித்து பாஸ் வாங்கிக்கொள்ளலாம்.
ePass விண்ணப்பிக்கும் முறைகள்
தமிழ்நாட்டில் ePass பெறுவதற்கு 6 விதமான வாய்ப்புகள் உள்ளன.
- தனி நபர் / குழு சாலை வழிபயணம்
- தனிநபர் / குழு ரயில் / விமான வழிபயணம் தமிழ்நாட்டிற்குள் நுழைதல்
- தனிநபர் / குழு ரயில் / விமான வழிபயணம் தமிழ்நாட்டிற்குள் பயணம்
- தொழில் நிறுவனங்கள் வெளி மாநிலபயணம்
- தொழில் வழி பயணம் சென்றுவருதல்
- புலம்பெயர் தொழிலாளர்களை தமிழ்நாட்டிற்கு கொண்டு வருதல்
இந்த முறைகளில் தேவைப்படும் ePass பெற்றுகொள்ளலாம். பாஸ் பெறுவதற்கு உங்களின் தொலைபேசி எண் , வாகன பதிவு எண் , ஆதார் எண் சரியாக குறிப்பிடவேண்டும்.
ஆதார் எண் / வாக்காளர் அடையாளயார எண் / ஓட்டுநர் உரிமம் சரியாக ஸ்கேன் செய்து சமர்ப்பிக்கவேண்டும்.
உங்களுடன் எவ்வளவு நபர்கள் பயணம் செய்கிறார்கள் என்பதை அவர்களின் ஆதார் எண்ணுடன் சரியாக குறிப்பிடவேண்டும்.
வாகனம் ஓட்டுபவர் பெயர், இருப்பிட முகவரி, செல்லும் இடத்தின் முகவரி சரியாக குறிப்பிட வேண்டும்.
ePass நிலையை தெரிந்துகொள்வது எப்படி ?
தமிழ்நாடு அரசின் ePass விண்ணப்பிக்கும் இணையத்தளத்திலேயே உங்களின் விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டதா இல்லையா என தெரிந்துகொள்ளலாம்.
நீங்கள் வெளியே செல்லும் பொது இந்த ePass -ஐ மொபைல் போன் மூலமாக பதிவிறக்கம் செய்து சோதனை சாவடிகளில் காண்பித்துக்கொள்ளலாம்.
விண்ணப்பிக்கும்பொழுது நீங்கள் கொடுக்கும் அனைத்து தகவல்களும் உண்மையானதாக இருக்கவேண்டும். அனைத்து விண்ணப்பங்களும் சம்பந்தப்பட்ட மாவட்டங்களில் சோதனை செய்வார்கள்.
தற்போது ePass பெரும் முறை மிகவும் எளிமையாக்கப்பட்டுள்ளது. நீங்கள் விண்ணப்பித்தவுடன் ePass உடனடியாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
இந்த தகவல் பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும் !!!
நன்றி !!!
ePass Apply பண்ண போறிங்களா ? Reject ஆகம இருக்க எப்படி Apply பண்ணனும் தெரியுமா ? #TNePass #TNGovt #eDesk #ePassUpdate
Reviewed by eGovernance Helpdesk
on
July 29, 2020
Rating:
No comments: