How to Apply Education Loan for Students | Vidyalakshmi Government Loan Scheme | Full Details
வித்யாலட்சுமி கல்விக்கடன் திட்டம்
இந்தியா முழுவதும் உள்ள அனைத்து மாணவர்களும் பயன்பெறுவதற்காக Vidyalakshmi Portal உருவாக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் படிப்பிற்காக கல்விக்கடன் தேவைப்பட்டால் இந்தஇணையதளத்தில் Online மூலமாக விண்ணப்பிக்கலாம்.
இதுவரை கல்விக்கடன் தேவைப்பட்டால் கல்லூரியில் சேர்ந்தபின் கட்டணம் செலுத்தவேண்டிய விபரங்களை பெற்று வங்கிகளில் சமர்ப்பித்து விண்ணப்பம் தரவேண்டி இருந்தது. மேலும் ஒரு சில காரணங்களுக்காக விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுவதும் உண்டு.
இனிமேல் நீங்கள் எந்த வங்கிகளுக்கும் செல்ல வேண்டியதில்லை. உங்களின் கல்விக்கடன் விண்ணப்பத்தை Online மூலமாக சமர்ப்பிக்கும் புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அனைத்து வங்கிகளும் இந்த வித்யாலட்சுமி இணையதளத்தில் பதிவு செய்திருப்பார்கள். நீங்கள் கல்லூரியில் சேர்ந்தபின் தேவைப்படும் அனைத்து ஆவணங்களையும் Scan செய்து சமர்ப்பிக்கலாம்.
உங்களுக்கு அருகாமையில் இருக்கும் 1 முதல் 3 வங்கிகள் வரை தேர்வு செய்து விண்ணப்பிக்கலாம்.
கல்விக்கடனுக்கு விண்ணப்பிப்பது எப்படி?
இந்திய அரசின் மூலமாக வழங்கப்படும் கல்விக்கடன்களுக்கு https://www.vidyalakshmi.co.in/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
மாணவர்கள் வங்கிகளுக்கு நேரில் செல்ல வேண்டியதில்லை. வீட்டிலிருந்தே Mobile / Computer மூலமாக Online -ல் விண்ணப்பிக்கலாம்.
நீங்கள் விண்ணப்பிக்கும் பொழுதே 3 நிதி நிறுவனங்கள் வரை தேர்வு செய்துகொள்ளலாம்.
Online-ல் விண்ணப்பிக்கும் முறை:
Vidyalakshmi Portal இணையதள முகவரிக்கு செல்லவும்.
உங்களுக்கு தேவைப்படும் Loan இருக்கிறதா என்று முதலில் Search செய்துகொள்ளவும்.
கல்விக்கடன் விண்ணப்பிக்க முதலில் உங்களது விபரங்களை Register செய்யவேண்டும்.
- உங்கள் Login மூலமாக விருப்பமான Bank Loan -ஐ Select செய்துகொள்ளவும்.
- தேவையான அனைத்து ஆவணங்களையும் சரியாக Upload செய்யவும்.
- விண்ணப்பம் பூர்த்தி ஒருமுறை சரிபார்த்துவிட்டு Apply செய்துகொள்ளவும்.
கல்விக்கடன் விபரங்கள் தெரிந்துகொள்வது எப்படி ?
Online மூலமாக விண்ணப்பித்தவுடன் Application Reference Number கிடைக்கும். உங்கள் விண்ணப்பம் முதலில் நீங்கள் படிக்கும் கல்லூரியில் Process செய்தபின்பு சம்பந்தப்பட்ட வங்கியின் மூலமாக Approval செய்யப்படும்.
உங்கள் விண்ணப்பத்தின் தற்போதைய நிலையை Online மூலமாக தெரிந்துகொள்ளலாம்.
உங்களின் கல்விக்கடன் Approve செய்யப்பட்டால் நேரடியாக வங்கிக்கணக்கில் பெற்றுக்கொள்ளலாம்.
ஒவ்வொரு வருடமும் கல்விக்கடன் தொகை நேரடியாக வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும். இந்த கல்விக்கடனை கல்லூரி முடித்து ஒருவருடம் வரை நீங்கள் செலுத்தவேண்டியது இல்லை. அதற்கு பிறகு வட்டியுடன் சேர்த்து செலுத்தினால் போதும்.
இதுபோன்று மாணவர்களுக்கு இன்னும் பல்வேறு சலுகைகள் மத்திய / மாநில அரசுகளின் மூலமாக தரப்படுகின்றன. மேலும் மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படுகிறது.
உங்களுக்கு இந்த கல்விக்கடன் விண்ணப்பிப்பது தொடர்பாக ஏதேனும் கேள்விகள் இருப்பின் Comment செய்யவும்.
இந்த தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும்.
மீண்டும் ஒரு அடுத்த பயனுள்ள பதிவினில் சந்திக்கலாம்.
நன்றி !!!
How to Apply Education Loan for Students | Vidyalakshmi Government Loan Scheme | Full Details
Reviewed by eGovernance Helpdesk
on
July 26, 2020
Rating:
Very useful news 🗞️🗞️...
ReplyDeleteI want ot apply for a education loan
ReplyDeleteSwetharamesh5006@gmail.com
ReplyDeleteInterest rate how much?
ReplyDeleteI want to apply for the educational loan
ReplyDeleteIt was an amazing blog.
ReplyDeleteapply for student education loan
As a student, you may be wondering how to finance your education. One option is to apply for an education loan. Here are some things to consider before you apply for a Loan.
ReplyDelete