இலவச வீட்டுமனை பட்டா வழங்கும் திட்டம் | Free House Site Patta Scheme 2020 |
வணக்கம் நண்பர்களே !!!
இந்த பதிவின் மூலமாக தமிழ்நாட்டில் வரவிருக்கும் ஒரு புதிய திட்டத்தினை பற்றி நீங்கள் தெரிந்துகொள்ளலாம்.
தமிழ்நாட்டில் வரவிருக்கும் புதிய இலவச வீட்டுமனை பட்டா வழங்கும் திட்டம்
இதுவரையிலும் 4.09 லட்சம் புறம்போக்கு நிலங்களில் வீட்டுமனைகள் கண்டறியப்பட்டுள்ளன. இவை அனைத்தும் ஆறு விதமாக பிரிக்கப்பட்டுள்ளன.
- UnObjectionable Promaboke and Regularized with District Level
- Regularizable with Consent of Local Body
- Regularizable after Special Orders from Government
- Temple Lands
- Objectionable Poramboke other than Water Sources
- Objectionable Poramboke with Water Sources
ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள புறம்போக்கு நிலங்கள் கண்டறியவேண்டும் என அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அனைத்து நிலங்களையும் சரியாக வகைப்படுத்தி அரசிற்கு தெரியப்படுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் இதுவரை 1.91 லட்சம் ஆட்சேபனையற்ற புறம்போக்கு நிலங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இங்கு வசிக்கும் அனைவருக்கும் இலவச வீட்டுமனை பட்டா வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த திட்டம் டிசம்பர் மாத முதல் வாரத்தில் முதலமைச்சரால் துவக்கி வைக்கப்படவுள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சியரின் மூலமாக இந்த இலவச பட்டா வழங்கப்படும்.
மேலும் தனியார் பகுதிகளில் உள்ள புறம்போக்கு நிலங்களில் சிக்கல்கள் இருந்தால் State Comitee மூலமாக தீர்வு காணப்படும்.
இந்த திட்டத்தின் சிறப்பம்சங்கள்:
தமிழ்நாட்டில் புறம்போக்கு நிலங்களில் வசித்து வரும் அனைவருக்கும் பட்டா கிடைக்கும் வழிவகை செய்யப்பட்டுள்ளது
ஆட்சேபனை இல்லாத அனைத்து வீட்டுமனைகளுக்கும் அந்த இடத்திலேயே PATTA வழங்கப்படும்
ஆட்சேபனை உள்ள புறம்போக்கு இடங்களில் வசித்து வரும் அனைத்து மக்களுக்கும் வேறு இடத்தில் PATTA உடனடியாக வழங்கப்படும.
ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள ஆட்சேய்பனை இல்லாத இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன. அந்த பகுதிகளில் சரியான இடங்கள் இல்லாவிட்டால் தனியார் இடங்களிலும் வீட்டுமனை பட்டா வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும் இந்த அனைத்து விபரங்களுக்கு தமிழக அரசின் தமிழ் நிலம் இணையதளத்தில் Update செய்யப்பட்டுள்ளது.
இலவச வீட்டுமனை பட்டா தேவைப்பட்டால் நீங்கள் Online மூலமாக விண்ணப்பிக்கவும் வழிவகை செய்யப்படவுள்ளது.
பட்டா Download செய்வது எப்படி ?
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நிலம் சம்பந்தப்பட்ட விபரங்களையும் தமிழ் நிலம் (TamilNilam) இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
நிலம் எங்கு உள்ளதோ அந்த இடத்தின் Survey Number மற்றும் Subdivision Number அல்லது பட்டா மூலமாக Download செய்யலாம்.
நல்ல திட்டம்
ReplyDelete