Ilam Thedi Kalvi Scheme 2021| இல்லம் தேடி கல்வி திட்டம் | Volunteers பதிவு செய்வது எப்படி?

திருச்சி, தஞ்சை உள்ளிட்ட 12 மாவட்டங்களில் தொடங்கப்பட்டுள்ள 'இல்லம் தேடி கல்வி' திட்டத்தில் ஒவ்வொரு தன்னார்வலர்களுக்கும் மாதம் ரூபாய் 1000 ஊக்கத் தொகை வழங்க ஆலோசித்து வருவதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறி உள்ளார்.




சென்னையில் உள்ள பள்ளிக் கல்வித்துறை அலுவலகத்தில் பள்ளிக் கல்வித் துறையின் சார்பில் நடைபெற்ற "இல்லம் தேடிக் கல்வி" பயிற்சிப் பணிமனை, விழிப்புணர்வு கலைப் பயணம் மற்றும் தன்னார்வலர்களுக்கான, இணையதளம் தொடக்க விழாவினை பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் கலந்து கொண்டு தொடங்கி வைத்தார்.


அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், இல்லம் தேடி கல்வித் திட்டத்தில் ஆர்வமுள்ள தன்னார்வலர்களுக்கு 1,000 ரூபாய் ஊக்கத் தொகை வழங்கத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாகச் செய்தியாளர்களிடம் அவர் மேலும் கூறுகையில், "இல்லம் தேடி கல்வித் திட்டத்தின் மூலம் தன்னார்வலர்களை இணைப்பதற்கான இணைய தளம் தொடங்கப்பட்டுள்ளது. 

அதில் ஆர்வமாகப் பலர் பதிவு செய்ய முன் வர வேண்டும். இந்த திட்டத்தை நாம் அனைவரும் மக்களிடம் எடுத்துச் செல்ல வேண்டும். பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை மாலை 5 மணி முதல் 7 மணி வரை கல்வி மையங்களுக்கு அனுப்ப வேண்டும்.

How to Register Volunteers


தன்னார்வலர்களுக்கு ரூ 1000

20 மாணவர்களுக்கு ஒரு தன்னார்வலர் என்கிற வீதம் இந்த திட்டமானது நடைமுறையில் இருக்கும். தொடர்ந்து 6 மாத காலத்திற்கு இந்த திட்டம் செயல்படும். திருச்சி, தஞ்சை ,நாகை ,கடலூர், திண்டுக்கல் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் இத்திட்டம் செயல்படுத்தப்படும். 


இந்த இணைய தளம் வழி கற்றல் வகுப்புகளை எல்லாம் அந்த அந்த பள்ளி நிர்வாகமே கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் கற்றல் இடைவெளியை இந்த திட்டம் குறைக்கும். ஒவ்வொரு தன்னார்வலர்களுக்கும் மாதம் ரூபாய் 1000 ஊக்கத் தொகை வழங்க ஆலோசித்து வருகிறோம்.

Eligibility Criteria

தன்னார்வலர்கள்..

  1. வாரத்திற்கு குறைந்தது ஆறு மணி நேரம் குழந்தைகளுடன் செலவிட தயாராக இருக்க வேண்டும் (அல்லது) பகுதி நேரமாகவும் தன்னார்வலராக இருக்கலாம்.
  2. கண்டிப்பாக குழந்தைகளுடன் உரையாட தமிழ் தெரிந்திருக்க வேண்டும்
  3. தமிழ், ஆங்கிலம், மற்றும் கணிதம் கற்றுத்தர வேண்டும். (பயிற்சிகளும் உபகரணங்களும் வழங்கப்படும்)
  4. யார் நிர்பந்தமும் இன்றி தன்முனைப்பாக பங்கேற்க வேண்டும்
  5. குறைந்தபட்சம் 17 வயது நிரம்பி இருத்தல் அவசியம்

Illam Thedi Kalvi Scheme: Volunteer Registration



Ilam Thedi Kalvi Scheme 2021| இல்லம் தேடி கல்வி திட்டம் | Volunteers பதிவு செய்வது எப்படி? Ilam Thedi Kalvi Scheme 2021| இல்லம் தேடி கல்வி திட்டம் | Volunteers பதிவு செய்வது எப்படி? Reviewed by eGovernance Helpdesk on October 20, 2021 Rating: 5

No comments:

Powered by Blogger.