அரசு பேருந்துகளில் இலவசமாக பயணிக்க அரசாணை வெளியீடு - மாற்றுத்திறனாளிகள் மற்றும் துணைவர் ஒருவர் பயணிக்கலாம்
Free Bus Ride for Physically Challanged Persons - TN Govt Released GO
மாற்றுத்திறனாளிகள் மற்றும் அவருடன் செல்லும் துணையாளர் ஒருவரும் அரசு பேருந்தில் கட்டணமின்றி இலவசமாக பயணம் செய்யலாம்.
- மாற்றுத் திறனாளிகள் தங்களுக்கு வழங்கப்பட்ட தேசிய அடையாள அட்டையை காண்பிக்க வேண்டும்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் முதலமைச்சராக பதவியேற்றதிலிருந்து மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து வருகிறார்.
இந்த நிலையில், மாற்றுத்திறனாளிகள் அரசு பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம் என தமிழக அரசு அறிவித்திருந்தது.
இதனைத் தொடர்ந்து தற்போது மாற்றுத்திறனாளிகள் மற்றும் அவருடன் செல்லும் துணையாளர் ஒருவரும் அரசு பேருந்தில் கட்டணமின்றி இலவசமாக பயணம் மேற்கொள்ளலாம் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
2016-ஆம் ஆண்டு மாற்றுத்திறனாளிகள் நல சட்டம் நடைமுறையில் உள்ள நிலையில், அதில் தெரிவிக்கப்பட்டுள்ள 21 வகையான மாற்றுத் திறனாளிகளில் 40% மற்றும் அதற்கு மேற்பட்ட மாற்றுத் திறனாளிகள், அவர்களது துணையாளர் ஒருவருடன் அரசு நகரப் பேருந்துகளில் கட்டணமில்லாமல் இலவசமாக பயணிக்கலாம்.
இச்சலுகையை பெற மாற்றுத் திறனாளிகள் தங்களுக்கு வழங்கப்பட்ட தேசிய அடையாள அட்டையை காண்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
'2016 ஆம் ஆண்டு மாற்றுத்திறனாளிகள் நல சட்டத்தின்படி, மாற்றுத்திறனாளிகள் மற்றும் அவர்களின் துணையாளர் ஒருவர், தமிழ்நாடு போக்குவரத்து கழகங்களால் இயக்கப்படும் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் கட்டணமில்லா பயணம் மேற்கொள்ள அனுமதித்து அரசாணை வெளியீடு
#TNGovtUpdate #FreeBusTravel #PhysicallyChallanged #FreeBusPass #IlavasaPayanam
#Arasaanai #FreeBusTravelArasanai
No comments: