முகக்கவசம் அணியவில்லை என்றால் அபராதம் - தமிழக அரசு உத்தரவு

 முகக்கவசம் அணியவில்லை என்றால் அபராதம் - தமிழக அரசு உத்தரவு


தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், முகக் கவசம் அணிதல் உள்ளிட்ட நெறிமுறைகளை கடைபிடிக்காதவர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும் என்று தலைமை செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.




தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாள் ஒன்றுக்கு சுமார் 500 நபர்களுக்கு கீழாக கொண்டு வரப்பட்டது. 


ஆனால் கடந்த 10 நாட்களாக படிப்படியாக வைரஸ் தொற்றின் அளவு உயர்ந்து வருகிறது. குறிப்பாக சென்னை, கோவை ஆகிய மாவட்டங்களில் 2 சதவிகிதத்திற்கு சற்று மேலாக பதிவாகி இருக்கிறது.


நோய் தொற்று எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்து, தற்போது மீண்டும் நாளொன்றுக்கு பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 800 நபர்களை தாண்டியுள்ளது.


நோய்த் தொற்று அதிகரித்து வருவதால், அதை மேலும் தீவிரமாக கண்காணிப்பதற்கான நடவடிக்கைகளை மாவட்ட வாரியாக தலைமைச் செயலர் ராஜீவ்ரஞ்சன் ஆய்வு நடத்தினார்.


இந்தக் கூட்டத்தில் தலைமைச் செயலாளர், காவல் துறை தலைவர், சென்னை பெருநகர மாநகராட்சி ஆணையர், மாநகர காவல்துறை ஆணையர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


அதில், பொது இடங்களில் பொதுமக்கள் முகக்கவசம் அணிவதையும், அரசு வெளியிட்ட நிலையான வழிகாட்டி நெறிமுறைகளை நிறுவனங்கள் கடைபிடிப்பதையும், ஊழியர்களுக்கு உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்படுவதையும் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்பு, சுகாதாரத் துறை, காவல் துறை, வருவாய்த் துறையினர் கண்காணிக்க வேண்டும் என்று தலைமைச் செயலாளர் உத்தரவிட்டார்.


இதனை மீறுபவர்கள் மீது பொது சுகாதார சட்டத்தின் கீழ் அபராதம் விதிக்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.


காய்ச்சல் முகாம்களை அதிகப்படுத்தி, நோய் தொற்று உள்ளவர்களை கண்டறிந்து, தனிமைப்படுத்தி உரிய சிகிச்சை அளிக்க வேண்டும் என்றும், தகுதி வாய்ந்த நபர்களுக்கு தடுப்பூசி செலுத்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் தலைமை செயலாளர் வலியுறுத்தினார்.

முகக்கவசம் அணியவில்லை என்றால் அபராதம் - தமிழக அரசு உத்தரவு முகக்கவசம் அணியவில்லை என்றால் அபராதம் - தமிழக அரசு உத்தரவு Reviewed by eGovernance Helpdesk on March 17, 2021 Rating: 5

No comments:

Powered by Blogger.